பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றவர்கள் யாரும் வரக்கூடாது; கோஷங்கள், வாணவேடிக் கைகள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது என்பதாகும். நானும் அந்த நிபந்தனைகளுக்கு உடன்பட்டேன்.

அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. தீபாவளியன்று இரவு, வீட்டில் உள்ள பெண்கள் எப்படித் துரங்காமல் வேலை பார்ப்பார்களோ அதைப்போல் நானும் நினைத்து நினைத்துக் காரியங்கள் செய்துகொண்டிருந்தேன். எப்படியோ பொழுது விடிந்தது. 30 - 6 - 65 .

காலை ஆறு மணிக்கே தயாராகிவிட்டேன். முதல்நாள் எனக்கு வந்த தபால்களையெல்லாம் சிறையதிகாரி எனக்கு அனுப்பி வைத்தார். நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்தி எழுதியிருந்த கடிதங்கள் அவை. அந்தக் கடிதங்களோடு மிக முக்கியமான இன்னொருகடிதமும் இருந்தது. அவரிடமிருந்து கடிதம் வரும் என்று நான் கனவி ல் கூடகாணவில்லை. அந்த கடிதம் இரண் .ே - வரிகளில் இரத்தினச்சுருக்கமாக அமைந்திருந்தது.

நானும் உங்களைச்சிறைவாசலில் நி ன் று வரவேற்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்’

தமிழ்நாட்டில் சுருக்கமாகவும் விளக்கமாகவும் எதையும் எழுதக்கூடியவர் ராஜாஜி அவர்கள் தான். மேலே உள்ள கடிதம் அவர் எழுதியதுதான். தனிப்பட்ட முறையில் என்னை அவருக்குத் தெரியாது. அவர் எனக்கு அறிமுகம் இல்லை. அவருக்குப் பிடித் தமான ஒரு கொள்கைக்காக நான் மேற்கொண்ட சிறைவாசத்தை எண்ணி அவர் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். வெளியில் வந்ததும் அண்ணுவிடம் காண்பிக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கடிதத்தை மட்டும் சட்டைப் பைக்குள் வைக்துக்கொண்டேன். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. காலை 7 மணி முதற்கொண்டே தெருவில் கூட்டம் நிறைந்திருப்பதாக அறிந்தேன். கலைஞர்கருளுநிதி அவர்கள்தான் எனக்கு முதல் மாலை அணிவிப்பதாக ஏற்பாடு. வெளியில் இருந்து வரும் வார்டர்கள், கோட்டை வாசலில் கூட்டம் தாங்கவில்லை.என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். 11 மணிவரை அவர்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டுமே என்று எனக்குக் கவலை. > -

காலை 8 மணி அளவில் நான் எதிர்பாராத தகவல் ஒன்று கிடைத்தது. சிறைவாசலில் அண்ணுவந்து காத்துக் கொண்டி ருப்பதாகச் சொன்னர்கள். முதல் நாள் மதுரை மாவட்டச்

71