பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குள்ளே என்னைத் தன்னந்தனியாகப் பார்த்ததினுல் என்னும் டைய தனிமையையும் வெளியே நடைபெற இருக்கும் விழா வையும் சேர்த்துப்பார்த்து, பிள்ளைப்பூச்சிகளைப்போல் இருக்கும் அந்தக் கைதிகள் வியப்படைந்துகொண்டிருந்தார்கள்.

சிறைச்சாலைக்குள்ளே ஒரு நூல் நிலையம் இருக்கிறது. வெளியிலே வாங்கமுடியாத அற்புதமான நூல்கள் சிறைச்சாலை நூல் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அதில் ஒரு முக்கியமான நூல்; ஆகஸ்டுக் கலவரத்தின் காரணக்கர்த்தாக்கள் யார்?' என்பது. அந்த நூலை வெள்ளைக்கார அரசாங் கம் அச்சிட்டு சர்க்காரின் அதிகாரப் பூர்வமான முன்னுரை யோடு வெளியிட்டிருந்தது. இந்தியா முழுவதும் ஏற்பட்ட குழப் பங்களுக்கும், கலவரங்களுக்கும், நஷ்டங்களுக்கும் யார் யார் பொறுப்பாளிகள் என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் இயக்கத்தின் ரகசியத் தீர்மானங்கள், காந்தியாரின் ரகசியக் கடிதங்கள் முதலியவற்றை துப்பறிவாளர்கள் மூலம் அறிந்து, வெள்ளைக்கார சர்க்கார் அதில் வெளியிட்டிருந்தது. காங்கிரஸ் அரசாங்கம் வந்தபிறகு அந்த நூலை நூல் நிலையத்தி லிருந்து அகற்றிவிடும்படி உத்தரவிட்டிருந்தார்கள். அதனல் புத்தகப் பட்டியலிலிருந்து அதை விலக்கியிருந்தார்கள், அலமாரி யிலிருந்த அந்தப் புத்தகம் எப்படியோ என் கண்ணில் பட்டுவிட் டது. அதைப் பார்த்தவுடன் இந்த நூல் இங்கே இருப்பதை விட அண்ணுவிடம் இருப்பது பயனுடையதாகும் என எண்ணி இதை எப்படியாவது எடுத்துக்கொண்டு போய் அண்ணுவிடம் சேர்க்கவேண்டுமென்று தீர்மானித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டேன். என் எண் ண ப்ப டி அதைச் செய்துவிடுவேன் என்று உங்களுக்குத் தெரியும்.

29 - 6 - 65

நாளை விடுதலை மதுரை மாவட்டச்செயலாளர் திரு. முத்து அவர்கள் சிறையில் என்னைச் சந்தித்தார்கள். அவர் சொன்ன தகவல் எனக்குப் பெருத்த வேதனையைத் தந்தது. அண்ணு அவர்கள் வரவேற்புக்கு வரவில்லை; மாலையில் நடை .ெ ற இருக்கும் பாராட்டுக் கூட்டத்திற்குத்தான் வருகிருர்கள். கலைஞர் கருணநிதி அவர்கள் புதுக்கோட்டைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு இ ர.வே மதுரைக்கு வந்துவிடுகிருர்கள். ஆகையால் காலை 11 மணிக்கு மேல் நீங்கள் வெளியில் வரு வதற்கு சிறை மேலதிகாரியிடம் சொல்லி ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்' என்ருர் மதுர்ை மாவட்டச் செயலாளர். அதன் படி சிறை மேலதிகாரி அவர்கள் காலை 11 மணிக்கு என்னை விடுதலை செய்ய இசைந்தார். அவர் சொன்ன நிபந்தனை, சிறைக்கோட்டிை வாசலுக்கு உள்ளே முக்கியஸ்தர்கள் தவிர

70