பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பந்தமான நூல்களை நிறையப் படித்தேன். கைரேகை சரிதான என்பதைப் பரிசோதிப்பதற்கு குற்றவாளிகளின் கைகள் பெரிதும்பயன்பட்டன. எனக்கு பொழுது போகவில்லை. உலகத்தில் வேகமானது மனம். எனக்கு முன்னுல் என்னுடைய மனம் சிறைவாசலைத் தினசரி தட்டிக் கொண்டேயிருந்தது. அண்ணுஎப்பொழுது வருவார்; சிறைக்கு வெளியே என்னென்ன நடக்கும்; க. லே ஞ ர் வருவாரா; என்றெல்லாம் நினைத்து நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். -

32]1=6=65

தூக்கம் களைப்பை நீக்கும் என்பார்கள். ஆல்ை நான் சிறைச்சாலையில் தூங்கித்துங்கியே களைத்துப்போனேன். ஒவ் வொரு நாளும் எனக்குத் துக்கம் வருவது பெரும் பாடாய் விட்டது, வெளியிலே விளக்கோடு உலாத்தும் வார்டர்கள் நான் தூங்காதிருப்பதைப் பார்த்து விடுதலை வந்து விட்டாலே இப் படித்தான் சார்' என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.

22•G-G5

காலை 10 மணி அளவில் மதுரை மாவட்டச் செயலாளர் என்னை சந்தித்தார். ஒரு பையில் 5 சி. க ரெட் பெட்டிகளைப் போட்டு என்னிடம் கொடுத்தார். அவருக்கு முன்னல் நான் சிகரெட் பிடிப்பதில்லையென்ருலும் சிறைச்சாலையில் இருக்கக் கூடிய ஒரு ஜீவனுடைய சாந்திக்காக அவரே எனக்கு சிகரெட் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அன்று ஒரு புதிய தகவலைச் சொன்னர். உங்களை வரவேற்க எல்லாத் தலைவர்களும் வரு கிருர்கள்;அறிஞர்அண்ணு, கலைஞர்கருளுநிதி, K.A. மதியழகன் டாக்டர். சத்தியவாணிமுத்து, என். வி. நடராஜன் இவர்க ளெல்லாம் வருவதாக எனக்குத் தகவல் கொடுத்திருக்கிருர்கள், 30-6-65 அன்று மாலை தல்லாகுளம் பெருமாள் கோயில் திடலில் உங்களுக்குப்பாராட்டுக் கூட்டம் ஏற்பாடுசெய்யப்ப்ட்டி ருக்கிறது. மறுநாள் காலை மேலச் சின்னனம்பட்டியில் நமது பி. எஸ். மணியனுக்குத் திருமணம், நாம் எல்லாத் தலைவர்களை யும் அழைத்துக்கொண்டு அங்கே போகவேண்டும்' என்ருர்,

இவ்வளவு தலைவர்களும் ஒரே முகமாக இங்கு வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மனதிற்குள்ளே எனக்கு ஒரு திருப்தி-எல்லோருக்கும் நாம் நல்ல பிள்ளையாக நடந்திருக்கி ருேம் என்று! - . * -

இவ்வளவு பேர் வரப்போவது சிறைச்சாலைக்குள்ளே இருப்பவர்வர்களுக்கு பெரிய ஆச்சரியத்தைத் தந்தது. சிறைக்

69