பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10-6-65

எனக்கு ஒவ்வொரு நாளும் விடுதலை உணர்ச்சி மேலோங்கிக் கொண்டிருந்தது. காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்கு பெற்றேர்கள் இசைந்து திருமணத்திற்கும் நாள் குறித்தால் எவ்வளவு உற்சாகம் இருக்குமோ அந்த அளவு உற்சாகத்தை நான் பெற்றேன். முரசொலி நம்நாடு’ இதழ்களில் என்னுடைய விடுதலை பற்றிய செய்திகள் பெரிய அளவில் வந்து கொண்டிருந்தன. - - -

என்னை வரவேற்பதற்கு சிறை வாசலுக்கு யார் யார் வரப்

போகிருர்கள் என்று கற்பனை செய்து கொண்டிருக்கும் காலக் கட்டம்.

15 - 6 - 65

என்னுடைய அறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பொருள்களை ஊருக்கு அனுப்ப ஆரம்பித்தேன். கழகத்தோழர் களும் நண்பர்களும் எனக்கு உதவிய பொருள்கள் நிறைந்து விட்டன. என்னுடைய சிறைவாசம் ஓராண்டு அல்லவா!' எப்படியோ ஒரு குடும்பத்திற்கு வேண்டிய சாமான்கள் சேர்ந்து விட்டன. என்னுடைய தம்பிகள் அருணுசலம், திருஞானம் இருவரும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் என்னைச் சந்தித்து சாமான்களை எடுத்துக் கொண்டு போனர்கள்.

20-6-6s

விடுதலை நாள் நொருங்கிக் கொண்டு வந்தது. சிறை வாசத்தின் போது என்னை முழுக்க முழுக்க கவனித்த டாக்டர் ஜி. கணபதி அவர்கள் எனக்கு சிறந்த கண்காணிப்பாளராக இருந்தார். வசதிக்குறைவினல் என்னுடைய உடம்பு வலிமை குன்றிவிடக் கூடாது என்பதற்காகச் சிறந்த வைட்டமின் உள்ள வில்லைகளை எனக்கு தந்து கொண்டிருந்தார். நான் சிறைக் குள்ளே செல்லும்பொழுது என்னுடைய எடை 120 பவுண்டு இன்று 128 பவுண்டு. குளிர்ச்சியான நிழலிலேயே ஓராண்டைக் கழித்ததால் என்முகம் கவர்ச்சியாகவும் என் உடல் திடகாத்திர மாகவும் இருந்தது. சிறைச்சாலைக்குள் நிறையப் படித்தேனே தவிர நிறைய எழுதவில்லை. நான் நடத்திய தென்னரசு' மாத இதழுக்கு நான்கைந்து சிறு க ைத.க ள் எழுதினேன். அண்ணு அவர்களின் காஞ்சி' இதழுக்கு தும்பைப்பூ, எனனும் நெடுங்கதை ஒன்று எழுதினேன். ஓராண்டில் நான் செய்த எழுத்துப் பணி இதுதான். ஒய்வு நேரத்தில் கைரேகை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பி அது

68