பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்கனவே உள்ளே அடைக்கப்பட்டிருந்த துரை முருகன் வேகமாகச் சிறை உள் முற்றத்திற்கு ஓடி வந்தார். என்னைப் பார்த்ததும் அவருக்கு ஒரு தைரியம், அவரைப்பார்த்ததும் எங்களுக்கு ஒரு புதியதெம்பு!

நாங்கள் எல்லோரும் ஒன்றாம் பிளாக்கில் சேர்ந்து இருந்தோம். வேலூர் சிறைச்சாலையில். சிறைவிதி முறைகளைத் தவறவிடாமல் பின்பற்றுவார்கள். வேலூர் சிறைச் சாலையை மதுரைச் சிறையோடு ஒப்பிடும்போது, மதுரையை நம் சொந்த வீடு என்று நினைக்கத் தோன்றும். வேலூர் சிறைச்சாலை சரித் திரப் பிரசித்திப் பெற்றது. ராஜாஜி, தேவர், அறிஞர் அண்ணு போன்ற தலைவர்கள் அந்தச் சிறைச்சாலையில் பலதடவைகள் காலத்தைக் கழித்து இருக்கிறார்கள். சுமார் மூவாயிரம் பேர் தாராளமாக வசிக்கக் கூடியது வேலூர் சிறைச்சாலை,கோட்டை வாசலை பார்க்க முடியாது. அவ்வளவு பெரியது. புத்தக சாலை ஒன்று இருக்கிறது. பொழுது போக்குவதற்காக நாங்கள் அங்கு போவது உண்டு. . . . r

சிறைச்சாலையின் கேட்டில் C. P. பிளாக் என்று ஒன்று இருக்கிறது. CP என்ருல் (Clossed Prison) எப்போதும் மூடப் பட்டிருக்கும் உட்சிறை என்ற பொருள். அங்குதான் 1962-ல் அறிஞர் அண்ணுவையும் அடைத்து இருந்தார்களாம். அந்த இடம் எங்களுக்கு ஒரு புண் ணியஸ்தலமாக இருந்தது. ஆனல் அங்கே எங்களை அனுமதிக்க மாட்டார்கள். ஒரு நாள் சென்னை யிலிருந்து மணி என்ற மிசா கைதி மாற்றப்பட்டு வேலூர் சிறைச் சாலைக்கு வந்தார். அவர் ஒரு திடுக்கிடும் தகவலைச் சொன்னர்.

கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிட்டிபாபு சிறைச்சாலையில் இறந்து விட்டார் என்பதே அந்தச்செய்தி. எப்படி இறந்தார்' என்று கேட்டோம். சிறைச்சாலைக்கு வந்த புதுதில் அங்கே பணியாற்றிய சிறை அதிகாரிகளின் தூண்டு தலின் பேரில் தி. மு. க. கைதிகள் கொடுமையாகத் தாக்கப் பட்டிருக்கிருர்கள். அவர்களில் சிட்டிபாபுவும் ஒருவர். அடி தாங்காமல் இரத்தக் காயம் ஏற்பட்டு சிறை மருத்துவமனையில் அவதிப்பட்டு இருக்கிருர். அவர் கடைசிவரை குணம்’ ஆக வில்லை. சிறைச்சாலையிலேயே இறந்து போளுர், வேலூர் சிறை முழுவதும் இந்தச் செய்தி பரவியது. எங்களால் எதுவும் செய்வதற்கில்லை. ஒருநாள் அனுதாப உண்ணுவிரதம் இருந் தோம். அதோடு சரி. வேறு வழியில்லை. -

86