பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதைத் தொடர்ந்து நாங்கள் பயப்படும்படியாகச் சில தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. சென்னை சிறைச்சாலையில் தி. மு. க. கைதிகளை அடித்த அதே அதிகாரி, வேலூர் சிறைச் சாலைக்கு மாற்றி வந்திருப்பதாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. அது உண்மைதான். வித்தியாசாகர் என்கிற அந்தச் சிறை அதிகாரி வேலூர் சிறையின் கண்காணிப்பாளராக வந்து சேர்ந் தார். சிறையே கப்சிப்” என்று ஆகிவிட்டது. ஒ வ் .ெ வ | ரு செவ்வாய்க்கிழமை காலையிலும் அவர் சிறை முழுவதும் ரவுண்டு வருவார். அப்போது எல்லோரையும் பற்றி விசாரிப்பார். திடீ ரென்று ஒரு நாள் என்னை அ ைழ த் து வ ரு ம் ப டி ஆள் அனுப்பினர். எனக்கு மனம் துணுக்குற்றது; இருந்தாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு நான் அவரை அறையில் போய்ப் பார்த்தேன். அவர் என்னிடத்தில் பேசும்போது தேன் ஒழுகப் பேசினர். உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக சிறை டாக்டருக்கு குறிப்பு வந்திருக்கிறது. ஆகையால் உங்களுக்குத் தேவையான மருந்துகளையும், வசதிகளையும் எல்லாம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்' என்று சொன்னர், எனக்குத்தலை சுற்றல் நின்றது. அதன்பிறகு வாரம் ஒருமுறை எனக்குE.C.G. பார்த்தார்கள். ரத்தக் கொதிப்பை அடக்க மாத்திரைகள் வழங் கப்பட்டன. வேலூர் சிறைக்குச் சென்ற ஒரு மாதத்திற்குப் பிறகு நானும் நண்பர் துரைமுருகனும் சிறை வாசகச்சாலைக்குச் சென்ருேம். அப்போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது. நானும் அவரும் புத்தகச் சாலையில் நல்ல புத்தகத்தைத் தேர்ந்து எடுத்தோம். -

வாசகச் சாலையிலிருந்து நடந்துவரும் போது ந ண் பர் து ை முருகன் ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே ஒரு கேள்வியைக் கேட்டார். உங்க ஊர்ப்பக்கம் இர ணி யூர் என்கிற கிராமம் இருகிறதா?' என்று கேட்டார். அதற்கு நான் அப்படி ஒரு கிராமம் இருக்கிறது. முப்பது வருஷங்களுக்கு முன்பு அந்த ஊரில் நாகரத்தினம் என்கிற கொள்ளைக்காரன் ஒருவன் இருந்தான். கொள்ளையைத் தவிர கொலை ஏதும் செய் யாத அவனை ஒரு கொலை வழக்கில் சிக் க ைவ த் து ஆயுள் தண்டனைக் கைதியாக்கி விட்டார்கள். இப்போதுதான் அவன் விடுதலையாகி இருக்கிருன் வெளியில் வந்த பிறகு அவன் கொள்ளையடித்த நகைகளைப் புதைத்து வைத்திருந்த இடத்தைத் தேடிக் கொண்டு இருக்கிருன். அவளுல் அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை" என்று நான் சொன்னேன்.துரைமுருகன் விழிப்படைந்து அவர் கையில் வைத்திருந்த புத்தகத்தை என்னிடத்தில் காண்பித்தார். அந்தப் புத்தகத்தில் நாகரத்தினம் கைதி எண் 6219, இரணியூர், திருப்புத்துர் தாலுக்கா, இராம நாதபுரம் ஜில்லா என்று ஒரு குறிப்பு எழுதப்பட்டு இருந்தது.

87