பக்கம்:பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாதைமக வுக்காற்றுந் தன்மைமறந்
தன்பின்றிக் தந்ந லத்தின்
மீதுகவனஞ்செலுத்தி மிக்கபொருள்
மணமகன்பால் வேண்டிப், பெற்ற
மாதைவிலை பேசிவிற்று வாணாளெல்
லாம்வருந்த வைக்கு மாயப்
பாதகர்கள் வீழ்நரகென்? பன்னிருகை
வேலவனே! பகரு வாயே. (௧௪)

மக்களுயிர் வாழ்தற்கு மாண்டொழில்கள்
பலவிருக்க, மரபிற் கேற்ற
தக்கதொழில் புரியாது, தருமமுறை
பாரதநந் தரணி தன்னில்,
எக்குலத்தும் இல்லாத, ஏந்திழையை
விற்றுண்ணும் இழிவு பூண்டு
மிக்கவசை யேயடைவார் வீழ்நரகென்?
வேலவனே! விளம்பு வாயே (க௫)

அங்கமெலாம் நொந்திடநா லாறுமதி
தான்சுமந்தும் அடைவே பெற்றும்
கொங்கையமு தங்கொடுத்துங் குழல்வாரிப்
பொட்டிட்டுங் கோதி லாது
செங்கனிவாய் மழலைமொழி செவிமடுத்துஞ்
சீராட்டுந் திருவை யொத்த
கங்கையைவிற் பார்வீழும் நரகென்ன?
வேலவனே! நவில வாயே. (க௬)