பக்கம்:பெண்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலை 97

யில் உளம் மகிழாதிருக்க முடியவில்லை. அவர்கள் முன் னேற்றத்திற்கெனத் தனி இதழ்கள், அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கெனப் பல பள்ளிக்கூடங்கள், அவர் களேச் சிறந்தவர்களாக்கப் பல ஆசிரியர்கள் ஆக இந்தப் பணி மிகச் சிறிய அளவில் இன்று இருந்தாலும், நாள டைவில் பெரிதாகிவரும் என்று எண்ண இடமிருக்கிறது. நிலையங்களின் தலைவர்களெல்லாம் அமெரிக்கா முதலிய மேலைநாடுகளுக்குச் சென்று, அங்குப் பெண்கள் போற்றப்படும் நிலையை அறிந்து வரவும் ஆரம்பித்து விட்டனர் என்ருல், தமிழ் நாட்டுப் பெண்கள் நிலை வருங் காலத்தில் சிறக்கும் என்று எண்ணத்தான் தோன்று கின்றது. என்ருலும், வளர்ச்சி வளர வேண்டும். பெண் கள் சென்னை போன்ற நகரங்களிலும், சிறுநகரங்களிலும் தாமாகவே அறிவிலும் பிறவற்றிலும் வளர்ந்துதான் வந்திருக்கிருர்கள். அந்தக் கிராமங்களைக் கண்டால் தான் உண்மையில் உளமுருகுகின்றது! நாட்டுக்கு கல்லரசு வந்தாலும் அந்தக் காட்டுமிராண்டிகளென வாழும் நாட்டுப்புரமக்களுக்கு ஏது வளர்ச்சியும் வாழ்வும் என்றுதான் எண்ணவேண்டியிருக்கிறது. தமிழ் நாட்டுத் தாய்மார் கிராமந்தோறும் இன்னும் வாட்ட நிலையிலேயே உள்ளனர். ஆடவர் ஆதிக்கம் அங்குக் குறைந்தபாடில்லை. மணமுறையும் பிறவும் மட்டுப்படவில்லை. பாரதியாரின் விழிப்புணர்ச்சி இன்று நாட்டில் இல்லை; ஏட்டிலேதான் இருக்கிறது. ஏதோ எட்டயபுரத்தில் ஒரு கோயில் கட்டி அவருக்குக் கைம்மாறு செய்துவிட்டோம் என்று திருப்திப் படுகிருர்கள் அவருடைய அடியவர்கள் என்று பேசிக்கொள்கின்றனர் ? ஆலுைம், உண்மையில் அவ ருக்கு நன்றி செலுத்த வேண்டுமானல், அவர்கள் நகரங் களில் வாழ்வதை விடுத்துக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். உல்லாசக்காரர் பவனியை ஒழித்து, இயன்ருல் கட்டைவண்டியில், அல்லாவிட்டால் கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/100&oldid=600950" இலிருந்து மீள்விக்கப்பட்டது