பக்கம்:பெண்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பெண்

நடையில் சென்று கிராமங்களையும், அவற்றின் மக்களை யும், சிறப்பாகப் பெண்களையும் கண்டு அவர்களுக்கு உள்ள குறைகளைப் போக்க வேண்டும். எங்கோ உயர்ந்த ஆட்சிப்பீடத்திலும், செல்வ மாளிகையிலும், சென்னை யிலும், டில்லியிலும் உட்கார்ந்து கொண்டு, பெண் இனம் முன்னேற வேண்டும்' என்று பிரசாரம் செய்தல் மட்டும் போதாது. எத்தனை ஊர்களுண்டோ, அத்த னேக்கும் செல்ல வேண்டும். எத்தனை வீடுகளுண்டோ அத்தனையிலும் புகுந்து, அவர்தம் தேவையை அறிந்து, ஒல்லும் வகையான் உதவ வேண்டும். அரசாங்கம் மட்டுமன்றி, தொண்டர் என்ற பெயர் வாங்க ஆசைப் படுபவர்களும் அந்த வழியைத்தான் மேற்கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட ஒரு சிலர் பெண் கல்வியை வளர்ப்பதற். காகவும், தாழ்ந்த பெண்களே உயர்த்துவதற்காகவும் உழைக்க முன் வந்துள்ளனர். அரசாங்கமும் ஆவன செய்வதாகப் பல அலுவலகங்கள் அமைத்துள்ளது. நாட்டு நல்வாழ்வில் அக்கறை உள்ளவர் அனைவரும் ஒன்று கூடிலைன்றி, எங்கள் பெண்கள் சமூகத்தை என்றும் உயர்த்த முடியாது. அவர் தம் நிலை மிகத் தாழ்ந்தது; நாயினும் பேயினும் கேடு கெட்டது, என்று: எவனே பாடிவைத்துப் போனனே, அந்த நிலையில் இல்லாவிட்டாலும், பிற காட்டாரை நோக்க, பிற இனத் தவரை நோக்க, தமிழ் இனப் பெண் தாழ்த்தப்பட்டே தான் கிடக்கிருள். அவளே முன்னேற்றத்திற்குக் கொண்டுவர வேண்டிய கடமை தமிழ் நாட்டு அரசாங் கத்திற்கும் பிற பொது மக்களுக்கும் உரிய ஒன்ருகும். சென்னை போன்ற நகரங்களில் பெண்கள் முன் னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்ருலும், அவர்கள் முன்னேற்றம் நாட்டில் உள்ள பெண்ணினம் அனைத்தை யும் தழுவி அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/101&oldid=600951" இலிருந்து மீள்விக்கப்பட்டது