பக்கம்:பெண்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலை '99,

செல்லும் அந்த வகையினதாக அமையவில்லையே ! நாகரிகம்ட்ைந்த அந்த'நாரிமணிகள், கிராமத்து ஏழைப் பெண்கள் வந்த்ால் ஏளனமாகப் பார்க்கும் அந்த இழி நிலையிலேதானே. இருக்கிருர்கள்? தம் போன்ற பெண். னினத்தார். இப்படி ஒடுக்கப்பட்ட நிலையில் கிராமங்: களில் வாழ்கின்ருர் என்பதைக் காணப் பதைப்பு உண்டாவதற்குப் பதில் பரிகாசங்தானே உண்டா கின்றது. பஸ்ஸிலும் படக் காட்சிகளிலும் தங்க ளது நாகரிக நடை உடைகளுடன் தோன்றும் தோற்றத்துக்கிடையில், அவர்கள் போன்ற கிராமப் பெண்கள், வந்தால் நகர மகளிர் அருவருக்கத்தானே செய்கின்றர்கள்? ஏதோ சென்னே நகர வாழ்க் கையையும், சிங்காரப் போக்கையுந்தானே சில பெண் கள் தங்கள் நாகரிகமாகக் கொள்ளுகின்றர்கள் ? ஆடவர் ஒரு புறம் பெண்ணினத்தை மட்டம் தட்ட வழி, பார்த்துக் கொண்டிருக்கும்போது, படித்த பெண்கள், எனப்பட்டினத்தில் வாழும் மங்கையர், ஏழைக் கிராமப். பெண்களே ஏறெடுத்தும் பார்ப்பதில்லையே! இந்த நிலை யில் நாட்டுப் பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளார்கள் என்று எப்படி கூற முடியும் ? -

பெண்களுக்குச் சொத்து உரிமையும் பிற உரிம்ை. களும் வேண்டும் என்று பேசுகின்றனர். பாராளுமன்றத் தார்கூட அந்த முறையில் சட்ட்ங்கள் செய்ய முயல் கின்றனர். ஆனால், அந்த முயற்சிக்குத்தான் எத்தனே' முட்டுக்கட்டைகள் ஆண் பெண் என்ற வேறுபாடு: எல்லாவற்றிலும் இருந்தே தீரவெண்டுமென வாதிடும் வழக்கர் நாட்டில் எத்தனே பேர் 1 ஏன், பெண்கள் கூட' அச்சட்டம் வேண்டா என்று பேசத்தானே வருகின்ருர் கள்? எத்தனையோ கூட்டங்கள் அச்சட்ட்த்தை எதிர்த்து நடக்கின்றன. ஆடவரைப் போன்று பெண்டிரும் சொத்துரிமை பெற்ருல் வரும் இழுக்குத்தான் என்ன ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/102&oldid=600952" இலிருந்து மீள்விக்கப்பட்டது