பக்கம்:பெண்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பெண்

அதற்குப் பதில் இல்லை. ஆல்ை, பழமை போற்றிப் பெண்களைப் படுபாதாளத்தில் தள்ள வேண்டும். அது தான் அவர்தம் வாதம். என்ருலும், விரைந்து முன்னேறும் மங்கையர் சமூகம் எல்லா எதிர்ப்புக்களையம் களைந்து பாரதியாரின் கனவை நனவாக்கும் என்னும் உறுதி எனக்குண்டு.

இன்றைக்குத் தமிழ் நாட்டுப் பெண்டிர் சற்றுக் கல்வி வளர்ச்சி பெற்றவராகக் காண்கின்றனர். அதற்குக் காரணம் தமிழ் நாட்டு அரசியலோ, வாழ்க்கை முறையோ அன்று என்று சொல்லிவிடலாம். மேலே நாட்டிலிருந்து ஈண்டுத் தம் சமயத்தைப் பரப்ப வந்த கிறித்தவப் பாதிரிமார்கள், ஊர்தோறும் கல்வி நிலையங்களும், மருந் தகங்களும் உண்டாக்கினர்கள்; மகளிர்க்கெனத் தனிக் கலா சாலைகளும், கல்லூரிகளும் அமைத்தார்கள் ; வீடு தோறும் சென்று, பெண்கள் முன்னேற வேண்டிய அற நெறிகளை எடுத்துரைத்தார்கள். ஆடவரே அன்றிப் பெண்டிரும் அப்பணியில் தலே நின்று நம் நாட்டுப் பெண் கள் நிலையை உயர்த்தினர்கள் என்ருல் மிகையாகாது. இன்று மேடைமேல் பெருஞ் சொற்பொழிவாளர்களாக வம், அரசியலிலே பங்கு கொள்பவர்களாகவும் உள்ள பெண்களில் பெரும்பாலார் இந்தக் கிறித்தவப் பாதிரி மார்தம் பள்ளிகளில் பயின்று பயன் பெற்றவர்களாகத் தான் இருப்பார்கள். எனவே, தமிழ் நாட்டுப் பெண்கள் சமுதாயம் இந்த அளவுக்கு முன்னேறி வளரக் காரண மாய் இருந்த கிறித்தவ சமயப் போதகர்களுக்குத் தமிழ் நாட்டு மகளிர் சமுதாயம் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறது.

மற்றும், பிறவாதொழிகை நன்றே ஒரு காலமும் பெண் பிறப்பே, என்ற பாட்டுப் பிறந்த நாட்டிலே, பேய் கொண்டாலும் கொளலாம் பெண் கொள்ள லாகாதே, என்ற வரட்டு வேதாந்தம் பிறந்த நாட்டிலே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/103&oldid=600953" இலிருந்து மீள்விக்கப்பட்டது