பக்கம்:பெண்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெண்

தோர்க்குக் காட்டுவதில்' எனக் கூறி, அதே அரசு கட்டிலில் கணவைேடு உயிர் விட்ட காட்சியும் நம் மனக்கண்முன் வந்து நிற்கின்றது!

மறக்கோலம் .ெ கா ண் ட கண்ணகியின் முன் காவற்றெய்வமும் அங்கியங்கடவுளும் கை கட்டி வாய் புதைத்து நின்ற காட்சியும் நம் மனக்கண்ணுக்குப் புலகிைன்றது. கடவுளரையும் தன் வாய்மொழிப்படி ஆட்டி வைத்த அந்நாளைய பெண்மைக் குலம் எங்கே! ஒலையின் சலசலப்புக்கும் அஞ்சி அஞ்சி அகங்குழையும் இன்றைய பெண்மைக் குலம் எங்கே!

அதோ பத்தினித்தேவிக்கு விழா ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சேரன் செங்குட்டுவன் அனைவ ரையும் அருகழைத்து ஏதோதோ பேசுகிருனே! யாருக்குக் கோயிலெடுப்பது என்பதல்லவா அவன் கே ள் வி? என்ன ! அனைவரும் வாய் மூடிக் கிடக்கின்றனரே! அமைச்சரும் கூடவா பேச இயலாது போய்விட்டனர்? என்ன! அப்படிப்பட்ட கேள்வியா அது? இருவருள் எவருக்குச் சிறப்புச் செய்வது என்பதுதானே? கோயி லெடுப்பது கணவன் மறைந்தபின் பதின்ைகு நாட்கள் சுற்றித்திரிந்து பின் நெடுவேள் குன்றத்து அடிவைத் தேறிய அணங்கு கண்ணகிக்கா, அல்லது கணவைேடு கழிந்த பாண்டிமா தேவிக்கா?’ என்னும் கேள்விதானே அது? என்ன! இதத்காக எவரும் பேசவில்லையே! திடீரென அனைவரும் ஊமையர் ஆகிவிட்டனரா? இதற்கா இவ்வளவு ஆழ்ந்த எண்ணம்? ஆம்! அதோ யாரோ எழுந்திருக்கின்ருரே! யார் அரசனுக்கு அ வ் வள வு அண்மையில் உள்ளவர்? வானவன் மாதேவியாரே! அரச பத்தினி யாரே! அவர் பேசவா முயல்கிருர்? ஆம்; கேள்விக்குத்தான் விடை தருகின்றர். ஆகவே, ஆடவர் அனைவரும் - அனைத்து நூலுணர்ந்த அமைச்சர் அனே வரும் - தலே தாழ்ந்து, சொல்வதறியாது தடுமாறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/13&oldid=600863" இலிருந்து மீள்விக்கப்பட்டது