பக்கம்:பெண்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்தே மங்கையர் நிலை 9

அவள், அந்த மாடமதுரை மாநகரின் தெருத்தொறும் சென்ற காலத்தில் கொண்ட தோற்றம் மறக்கவியலு வதோ! எத்தனை இடர்வந்தாலும், எண்ணி எண்ணி அடுப்பங்கரையில் அமர்ந்து கண்ணிர் வடிக்கும் இன் றைய நாகரிக நாட்டு மங்கையர் எங்கே! மன்னவன யினும், தவறிழைப்பாயிைன், அவன் குற்றத்தை எடுத்துக் காட்டி நியாயம் பெற வெற்றிச் செல்வியாம் கொற்றவைபோலக் கொற்றவன் அவைக்களம் நண்ணிய அந்தக் கண்ணகி எங்கே!

சென்ற செல்வி செய்த தென்ன? அங்கே அழுத கண்ணும் சிந்திய முக்குமாய்த் தேம்பி நிற்கவில்லை அவள். 'அழுது புரண்டாலும் மாணடார் வாரார்.' என்பது அவள் அறிந்ததே. ஆயினும், தென்னவன் தவறிழைத்ததை மண்ணவர் அறியக் காட்டுவதே அவள் கருத்து. அனைவரும் அடிவணங்கும் பைந்தமிழ் வளர்த்த பாண்டியனத் தேரா மன்ன' என்று வீரத்தோடு விளிக் கின்ருள்; பிறகு தன் கணவன் கள்வன் அல்லன் என்ப தைத்தன் காற்சிலம்பை உடைத்து, அதனின்று தெறித்த மாணிக்கப் பரல் மூலம் நிலைநாட்டுகின்ருள்; தவறிழைத்த பாண்டியனே அறத்தையே கூற்ருக்கிக் கொல்விக் கின்ருள். அந்நிலையில் எந்நாட்டிலும் எடுத்துக் காட்ட வியலாத தமிழ் நாட்டுத் தனிப் பெருஞ்சிறப்பாய் உள்ள கற்பு நெறி நம் மனக்கண் முன் மாட்சியுடன் காட்சி யளிக்கின்றது. தமக்குத் தவறு நேர்ந்த கால அஞ்சி அலமராது முன் வந்து அறமுரைத்த வீரப்பெண்ணுகிய கண்ணகி நம்முன் காட்சி அளிக்கும் அதே நேரத்தில், மறு கோடியில் தன் கணவன் தவறிழைக்க அத் தவறே அவன் உயிரைக் கவர்ந்ததைக் கண்ட கற்புச் செல்வி பாண்டிமாதேவி தானும் அவ்வறந் தவறிய நாட்டில், தன் கணவன் பிழைபட்டான் என்று பிறர் பேசக் கேட்கவேண்டாப் பெருந்தகவால், கணவனே இழந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/12&oldid=600862" இலிருந்து மீள்விக்கப்பட்டது