பக்கம்:பெண்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - பெண்

கும் எல்லா வகையிலும் வேறுபாடு காட்டுங் கருத்துப் புகுந்துவிட்டதே ! ஏன் ? மனிதர்களுக்குள்ளே செல்வத் தாலும், செருக்காலும், பட்டம் பதவியாலும், பிறவற். ருலும் வேறுபாடு காட்டக்கற்ற சமூகம், இதைத்தான செய்யும் ! இன்னும் என்னென்ன கொடுமைகளைச் செய்ததோ, யாரறிவார் ! ஆனால், அந்தப் பழம்பெரு நாளை - அணங்கனையார் எங்கும் சிறப்புற்று விளங்கிய அந்நாளே - நினைக்கும் போது எவ்வளவு உணர்வு நம் உள் ளத்தில் ஊற்றுப்போலப் பெருக்கெடுக்கின்றது !

அந்தப் பாண்டியன் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டத் தவறிழைத்தான். அத்தவற்ருல், கோவலன் கொலையுண்டான் என்பதை அறிந்த கண்ணகிக் குண்டான சீற்றம் செப்புங் திறத்ததோ ! இக்காலத்துப் பெண் டிரைப் போல ஒரு முலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைக்கவில்லை அங்கங்கை ஐந்தாறுபேரைக் கட்டிக் கொண்டு எதுகைமோனை நயம்பட அழுகைப் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கவில்லை. அவளிடம் பெண்டிற்குரிய பெருங்குணங்கள் அனைத்தும் குடிகொண்டிருந்தன. மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே. என்று கோவலன் அவளை அழைக்கும் காலத்து அவளது கற்பின் திட்பமும், அறிவின் செறிவும் நம் மனக்கண்முன் தோன்ருமற் போகவில்லை. தன் கணவன் மாதவியோடு மகிழ்ந்துறைந்த காலத்தும் அவன் மனம் கோவைகையில் உள்ளவற்றையெல்லாம் உவந்தளித்துப் பின்னர் வழங்கப் பொருள் இன்மையால் விலைமதிக்கக ஒண்ணுத தன் காற்சிலம்பையும் கொடுக்க விழைந்த காரிகை அக்கண்ணகி. அக்கண்ணகியே பாண் டியன் முன் - தவறிழைத்த தமிழ்நாட்டுத் தலைசிறந்த வேந்தன் முன் - கொற்றவையாய்க் காட்சி தருகின்ருள். தவறிழைத்த வேந்தன் தான் இழைத்த தவற்றை உண ரச் செய்வதற்காக, ஒற்றைச் சிலம்பைக் கையிலேந்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/11&oldid=600861" இலிருந்து மீள்விக்கப்பட்டது