பக்கம்:பெண்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்தே மங்கையர் நிலை 7

ஆம் அவர் மூதாட்டியார். ஆகவே, அனைவரிடத் தும் அட்டியின்றி அளவளாவிப் பழகினர்' என்று சொல் வார்கள். இள நலங் கனிந்த அணங்கனையார் சிலரும் அரசர்க்கு அறிவுறுத்தியும், பிறவகையில் நாட்டுக்கு நன்மை புரிந்தும் வாழ்ந்த அந்தப் பெருநாள், நல்ல வேளையாக, மறையாது நிலைபெற்ற நாளாகிவிட்டது ! வடநாட்டவரும் வணங்கி வாழ்த்த ஒரு தனிக்கோ லோச்சிய ஒப்பற்ற கரிகாலன் தனது பொய்க்களிப்பை மெய்க்களிப்பாக எண்ணித் தன்னை மறந்திருந்த கால, அஞ்சாது அவன் முன்னின்று, நின்னினும் நல்லன் அன்றே, புறப்புண் நாணி வடக்கிருந்தோனே ? என்று அறிவுறுத்தும் ஆற்றல் யாருக்கு இருந்தது ? அந்த வெண்ணியூரில் வாழ்ந்த குயத்தியார் என்ற பெண் மணிக்கல்லவா அது பொருந்தியிருந்தது ? முதுகில் அம்பு பட்ட காரணத்தால், படைவிட்டுத் தனிப்பட்டுச் சேரலாதன் வடக்கிருக்க, அந்த நிலையில் பகைவர் படை யினைத் தோற்கடித்து, அந்த வெண்ணிப் பறந்தலையில் வாகைசூடி, வெற்றிவிழாக் கொண்டாடினன் கரிகால் வளவன். அவன் வெற்றிக் களிப்பில் அருகிருந்த ஆடவர் அனைவருக்கும் அவனுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற எண்ணம் பிறக்கவில்லை. அந்த ஊரில் வாழ்ந்த குயத்தி யார் என்னும் நல்லியற்புலமை மெல்லியலார் அவன் அருகிற்சென்று, நாடாளும் பெருமன்னன் என்றும் அஞ்சாது, அவன் வெற்றி விழா மதிப்புக் குரியதன்று என்று அறமுரைத்தது வரலாறு கண்ட ஒன்றன்ருே ?

இன்னும் வெள்ளி வீதியார் போன்ற எத்துணைப் பெருஞ்செல்வியர் கருத்துக்கினிய கவிகள் புனைந்து நாட்டை வளம்படுத்தியுள்ளனர் 1 பெண்ணறி வென்பது பெரும் பேதைமைத்தே, என்று பேசிய இடைக்கால இழிகருத்துச், சங்க காலத்துக் காணுதது போலும் ! எப்படியோ இடைக்காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/10&oldid=600860" இலிருந்து மீள்விக்கப்பட்டது