பக்கம்:பெண்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பெண்

அறவுரைகளே ஏற்றுக்கொள்ளக் காத்துக்கிடக்கும் கொற் றவர் தாம் எத்தனை பேர் ! அதோ அரசர்க்கிடையில் தூது செல்லும் அந்த அன்னயாரின் பேறும் பீடும் சொல்லில் அமைவனவோ தொண்டைமான் அருகி லிருந்தும் அவனுக்கு அஞ்சாது அணி பெற்று விளங்கும் அவனது படைக்கலக் கொட்டிலே இகழ்ந்துரைத்த அவர் ஏற்றந்தான் எவ்வளவு உயர்ந்தது / அவர் பாடிய அந்த அறுபது சங்கச் செய்யுட்களும் எவ்வளவு ஏற்றம் பெற்று விளங்குகின்றன அகமும் புறமும் அழகாக அமைத்துப் பாடும் அப்பெருநெறி, என்றென்றும் அறிஞ ரால் போற்றப்பட்டு வருகின்ற ஒன்றன்ருே அரசன் அதிகமாைேடு அருகிருந்து, அவன் அரசியற் பணிகளி லெல்லாம் பங்கு கொண்டு, உற்றுழி உதவி, ஒப்பற்ற இராச தந்திரியைப் போல வாழ்ந்த சங்க காலப் பெண் மணியின் பெருந்திறன்-அம்மம்ம ;-பேசவும் கூடுமோ ! ஆடவர் முன் செல்லின் அச்சம் வேண்டும், என்று பேசும் பெண்ணினத்திலே அத்தகைய ஒரு பெருஞ் செல்வியார் ஒருசேர முப்பெரு வேந்தரையும்- தமிழ் நாட்டுத் தனி வேந்தர் மூவரையும் - கண்டு. அவர் தம் ஒற்றுமையைவியந்து பாராட்டி யிருக்கும் பெரும்பண்பு வரலாற்றில் நிலைத்த இடம் பெற்ற ஒன்றன்ருே மண மற்று வாடும் மலரைப் போன்ற பாரி மகளிரைப் பரிவுடன் கொணர்ந்து, மாறுபட்ட மூவேந்தர் முன்னி றுத்தி, வேண்டா மன்னரைப் பணிவித்து, மகட்கொடை நேர்ந்து, தம் ஆற்றலே நிறுத்தி அரும்புகழ் பெற்றவரென ஒளவையார் போற்றப்படுகின்ருரே ! இத்துணைக் கலை நலனும், அறிவுத் தெளிவும், அரசியற் பழக்கமும் பெற்ற மூதாட்டியார் ஒருவர், தமிழ் நாடே, உன்னிடத்தில் வாழ்ந்துதானே மறைந்திருக்கின்ருர் ! இத்தகைய பெண் னிற் பெருந்தக்காராய செல்வியரைப் பெற்ற நீ, இன்று எவ்வாறிருக்கின்ருய் ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/9&oldid=600859" இலிருந்து மீள்விக்கப்பட்டது