பக்கம்:பெண்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்தே மங்கையர் நிலை

இதோ நானும் பெண்ணுய்த்தானே வாழ்கின்றேன் ! என் அருமைத் தமிழ் நாடே ! உன்னிடம் எத்தனை எத்தனை அரும்பெருஞ்செல்விகள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து, நாட்டுக்கும் உலகுக்கும் வழி காட்டிகளாய் இருந்து மறைந்தார்கள் ! அவர்கள் இருந்து அறம் வளர்த்த இந்நாட்டில் நானும் ஒரு பெண்ணுய் உலவி வருகின்றேனே அறப்பெருஞ் செல்வியர் பலர் வாழ்ந்த தமிழ் நாட்டில் இன்று பெண்கள் கிலே இரங்கத்தக்க தாகத்தானே அமைந்துள்ளது !

அதோ ! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் என் அருமைத் தமிழ் நாட்டில் பெண்டிர் வாழ்ந்த காட்சி என் மனக் கண்முன் தோன்றுகின்றதே ! அதோ ! பெருநெறி உணர்த்திய நரை மூதாட்டிகள் என்னே வாழ்த்து கின்ருர்கள் 1 ஆகா அவர் தம் முதுமையும் அறிவின் பெருமையும் எவ்வாறு போட்டியிடுகின்றன பெண்கள் அஞ்சி அஞ்சிச் சாகும் பரம்பரையில் வந்தவர்கள்,' என் பதை அப் பெருமாட்டிகள் எவ்வளவு எளிதில் பொய் யாக்கிவிட்டார்கள்! அவர்தம் அடி பணிந்து, அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/8&oldid=600858" இலிருந்து மீள்விக்கப்பட்டது