பக்கம்:பெண்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்தே மங்கையர் நிலை 13

பேகன் தன் காதற்றலைவியைச் சேர்ந்து களிமகிழ் வெய்தின்ை.

பூதப்பாண்டியன் தேவியார் தம் வீரவாழ்வு எப்படிப் போற்றப்படுகின்றது ! பாரி மகளிர் பாடிய பாடலும் நம் காதுகளில் ஒலிக்கின்றனவே! வாழ்வும் தாழ்வும் அவரை ஏற்றியும் இறக்கியும் வந்த அந்த நிலைகளில் அவர்தம் உள்ளத்தமைந்த புலமை நிலை வெள்ளமெனப் பெருக்கெடுத்து வந்துள்ளதை வியவா தார் யார்!

அந்தக் காலத்தே பெண்களுக்கு எவ்வளவு உரிமை இருந்தது! ஒருத்தி தான் விரும்பிய கணவனே மணந்து களவும் கற்பும் கடவாது வாழ்ந்த அந்தப் பெருநெறி தானே அன்றைய இலக்கியங்களிலெல்லாம் பேசப் படுகின்றது! எட்டுத்தொகை நூல்களுள் ஆறு நூல்கள் காதல் வாழ்வையே குறிப்பன வல்லவா ? ஒருவனும் ஒருத்தியும் ஒத்த நலனும் ஒத்த கல்வியும் கொண்டவர் என்று கூறும்போது - ஆடவரோடு பெண்டிரும் ஒத்த கல்வி நலம் பெற்றிருந்தனர் என்பதை அறியும்போது - எவ்வளவு உணர்ச்சி உண்டாகின்றது ! கணவனோடு மனங்கலந்து வாழும் அக்காதல் நெறியிலே எவ்வளவு பெருமை அன்றைய தமிழ் மக்களுக்கு! வீடும் வேண்டா விறலும், அந்தக் காதல் வாழ்வில் முகிழ்த்த ஒன்று அன்ருே ? அதலைன்ருே இரண்டறங்களையும் எண்ணிப் பார்த்த திருவள்ளுவர், இரண்டினும் மேலாயது காத லறம் என்பதைக் கண்டு, 'அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை" என்று தேற்றேகாரம் கொடுத்துக் கூறினர். மனக்குரியவள் பெண் என்பதையன்ருே இல்லாள்" என்ற சொல்லும், மனைவி' என்னும் சொல்லும், ,மனைக் கிழத்தி என்ற தொடரும் எடுத்துக் காட்டுகின்றன. அந்த இல்லற நெறியில் கணவனது வாழ்வுக்குத் துணை யாய் நின்ற செல்வியர், மனேக்கணிகலகை மங்கலமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/16&oldid=600866" இலிருந்து மீள்விக்கப்பட்டது