பக்கம்:பெண்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பெண்

யன்ருே வாழ்ந்தனர். அவர்தம் காதல் வாழ்வல்லவா அறிவறிந்த கான்முளைகளே உலகுக்கு ஈந்தது! ஆம்! தம் மைந்தரையும் மகளிரையும் போற்றிப்புரந்து, அவையில் வல்லரென உலகம் புகழ, அவர்தம் அரும்புகழ் கேட்டு மகிழ்ந்த தாயர் தமிழ் நாட்டில் எத்தனையோ பேர் ! ஈன்ற பொழுதினும் அவன் புகழ் கேட்ட பொழுதல்லவா அன்னேயின் மகிழ்ச்சி பன்மடங்காய்ப் பொலிந்தது! அந்தோ அந்தக் குறளுக்கு ஏனே பரிமேலழகர் உரை வகுக்குங்கால் வழுக்கிவீழ்ந்தார்! அவர் மேல் குற்றம் இல்லை; அது காலத்தின் கோளாறு. வள்ளுவர் காலத் தமிழ்நாட்டுக்கும் பரிமேலழகர் காலத்துத் தமிழ்நாட்டுக் கும் எத்துணை வேறுபாடு காணமுடிகின்றது. வள்ளுவர் பெண்களே வாழ்வின் துணையாக-அத்துணையால் பெறும் நலமாக - அமைத்தார். அவர் காலத்துப் பெண்மை அத் துணைப் பெருஞ் சிறப்புடையதாய் இருந்தது. ஆல்ை, பரிமேலழகர் காலத்திலோ, பெண்ணடிமை நாட்டில் கிலேபெற்று விட்டது. பெண்டிர் ஆடவரினும் தாழ்ந்த இயல்பினர் என்ற கொள்கை எப்படியோ நிலைபெற்று விட்டது. பெண் அறிவென்பது பெரும் பேதைமைத்து,' என்ற கொள்கை நிலைபெற்ற காலம் அது. அந்தக் கால மெனும் கடும்புயலால் தாக்குண்ட பரிமேலழகர், வேறு எவ்வாறு அக்குறளுக்குப் பொருள் காண இயலும் ஒரு தாய் தன் மகனது பெருஞ் சிறப்பை எவ்வளவுதான் கண் ணுற் கண்ட போதிலும், அவனைப்பற்றி மற்றவர் புகழ்ந் துரைக்கக் கேட்பதுதானே அவளுக்குப் பேரின்பம் ? மற்றும் புகழானது கண்டறிவது மட்டுமன்று; மற்றவர் வாய்க் கேட்டறிவதிலேயே நிறைவெய்துவது. பெண்ணும் ஆணும் தத்தம் வாழ்வின் வழிவந்த மக்கள்தம் புகழை மற்றவர் கூறக் கேட்டனர். அவருள் பத்துமாதம் சுமந்து பெற்ற மங்கை நல்லார் தம் மைந்தர் புகழைக் கேட்டு மிகமிக மகிழ்ந்தனர். இந்த நிலையில் தன்மகனேச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/17&oldid=600867" இலிருந்து மீள்விக்கப்பட்டது