பக்கம்:பெண்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்தே மங்கையர் நிலை 15.

சான்ருேன் எனக்கேட்ட தாய்' என்றனர் வள்ளுவர்தந்தையினும் தாய்க்கு உண்டாகும் மகிழ்ச்சி அதிகம் என்பது கருதி. ஆனால், பரிமேலழகர், தம் காலச் சுழலி டைப்பட்டுத் திசை தடுமாறிய காரணத்தால், பெண்களே இழிவு படுத்தும் முறையில் மக்கட்பேறு என்னும் அதிகாரத்தைப் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றி யும், கேட்டதாய்' என்பதற்குப் பெண்களுக்கு இயல் பாகவே அறியும் அறிவு இன்மையின் கேட்ட தாய் என்று கூறினர்’ என்று பொருளெழுதியும் சென்ருர். பாவம் ! அவர் என்ன செய்வார் ! காலம் அவ்வாறு சொல்ல வைத்தது. அதை மாற்றி உண்மையில் வள்ளுவர் உளத்தைக் காணும் - பெண்கள் நலம்பேனும் காலத்தில் நாம் நிற்க முயல்கிருேம்.

அந்தச் சங்க காலத்தில் பெண்டிர் எவ்வாறு கலை களில் வல்லவராய் இருந்தனர் என்பதை எண்ணும் போது உள்ளம் உவக்கின்றது. எத்தனை வகையான இசைக்கருவிகள் இந்நாட்டில் இருந்தன என்பதை எண்ணிக் கூற இயலுமா? ஆடலும் பாடலும் அரிவைய ரிடமே அடைக்கலமாக இருந்தன. கண்ணுக்கினிய கருத்துக்கேற்ற கணவரைத் தாமே தேர்ந்தெடுத்த அக்காரிகைமார், இவ்வருங்கலைகளின் மூலம் எப்படி அவர்தம் உள்ளத்தை உவகைக்கடலில் ஆழ்த்தியிருப்பர். வீணையும் நாதமும் போல அவர்தம் வாழ்வு எவ்வாறு இன்பக்கடலில் மிதந்து சிறந்திருக்கும் ஆகா! அந்தத் தலே மகட்கு உரிய கிளவியைப்பற்றி விதந்தோத வந்த ஆசிரியர் தொல்காப்பியர்ை,

அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே."

என்று எவ்வளவு சிறப்பாகக் குறிப்பிடுகின்ருர் 1 மக்கள் வாழ்வின் வழிகாட்டிகளாய் அமைந்த அந்த அன்பும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/18&oldid=600868" இலிருந்து மீள்விக்கப்பட்டது