பக்கம்:பெண்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பெண்

அதன் அருங்குழவியாகிய அருளும் தலைவி மாட்டு அமைந்து கிடக்கும் பெருநிலையை யன்ருே அவர் எழுத் துக்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன? இன்னும் தலைவிக்கு உரிய இயல்பாகவும், மரபாகவும் அத்தொல் காப்பியர் காட்டும் சான்றுகள் எவ்வளவு பொருட் செறிவை உடையனவாய் அமைந்துள்ளன:

தாய்போற் கழறித் தழீஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கு உரித்தென மொழிப.'

என்ற இயல்பும்,

தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல் எத்திறத் தானும் கிழத்திக்கு இல்லை."

என்ற மரபும் எண்ணி எண்ணி மகிழத் தக்கன அல்லவா ? தலைவன் தவறிழைத்துத் தன்னை மறந்து பிறர் வயப்பட்ட அந்தப் பிழைபாடிடத்தும், தாய் தன் குழந்தையிடம் காட்டும் கருணை நோக்கோடு அன்புடன் தன் கணவனைத் தாங்கி ஆதரிக்கும் தலையன்பு, நினைத் தாலும் நெஞ்சு நெக்குருகும் ஒரு பண்பன்ருே தான் அமைந்து வாழ்தலே இல்வாழ்வின் ஏற்றம் என்ற பெரு நெறியில் அடக்கமுடைமை ஆய்ந்து அறிந்து கண்ட நெறி வழியே, கொண்ட காதலன்முன் தான் எவ்வளவு சிறந் தவளாயினும் தன்னைப் புகழ்ந்துகொள்ளாத ஒரு பெரு கெறி மறுபடியும் தமிழ் நாட்டுப் பெண்ணுலகத்தில் மலருமா ! இல்லாத அழகினே உண்டு எனக் காட்டுதற் காகப் பல துணைப்பொருளை நாடி அலங்கரித்தும், இல்லாத அழகினே எடுத்துப் பேசியும், சொல்லிலும் செயலிலும் தற்புகழ்ச்சி காட்டும் காகரிகப் பெண் வாழும் சென்னை போன்ற நகரங்களிலே இந்தச் செயல் காண முடியாத ஒன்றன்ருே இப்படிக் கொண்ட கணவன், அவன் வழி வரும் மக்கள் ஆகிய அவர்தம் நலத்துக்காகத் தன் வாழ்வை, வளத்தை, பெருமையை, பிற செல்வங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/19&oldid=600869" இலிருந்து மீள்விக்கப்பட்டது