பக்கம்:பெண்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்தே மங்கையர் நிலை 17

வேண்டா என ஒதுக்கும் தியாகமும் அன்றைய பெண் உரிமை நாட்டில் விளைந்த ஒரு பெருஞ்செல்வமன்ருே ? ‘நமக்கு எல்லா உரிமையும் இருக்கின்றது !' என எண்ணி மனம்போன போக்கெல்லாம் போக நினைக்கும் ஒரு நாட்டில் இது போன்ற உரிமையும் தியாகமும் ஒருங்கே அமைந்த ஒரு பெண்மை உருக்காணக் கிடைத்த காலமும் ஒன்று இருந்தது என எண்ணும்போது எந்தத் தமிழ்ப் பெண்தான் மனம் மகிழ மாட்டாள் !

அந்தப் பெருநாளே எண்ணி மகிழும் அதே வேளை யில், ஏனே ஒரு புறம் வருத்தம் வந்து நிற்கின்றது ! அந்தக் காட்சி மேடையில் ஒர் அவலக் காட்சியும்கூட வன்ருே தெரிகின்றது ஆம்! அதோ தெரிகின்றதே, அந்தத் தெரு யாருடையது? பரத்தைய ருடையதா ? அப்படியென்ருல், அந்த நாளிலேயே இப்படி உடலே விற்கும் ஒரு தொழில், பெண்களுள் ஒரு சிலருக்கென அமைந்து விட்டதா? அஃது எப்படி இயலும் ? புலவர் தம் கற்பனையாய் இருக்குமா அது! அன்றன்று ! தொல் காப்பியம் தொட்டு எந்த இலக்கியத்திலும் அப்பரத்தை யர் இபசப்படுகின்றனரே ! தமிழ் நாட்டுத் தலை சிறந்த நாகரிகம் நிறைந்த நாள் என்று பேசப்படும் அந்தக் காலத்திலுங்கூட இதுபோன்ற அநாகரிகமும் கூடவே வாழ்ந்துதான் வந்ததா ? இன்று வாழ்கின்ற செல்வருட் சிலர் வைப்பாட்டி' என்று ஒரு பெண்ணே உடன் இருத்திக் கொள்வதுதான் பெருமை என்று எண்ணிப் பொய் வாழ்வு வாழ்கின்றனரே, அதுபோன்று அன்றைக் கும் தமிழ் நாட்டுச் செல்வரும் பிறரும் வாழ்ந்து வந்தனரா ? ஆகா! அந்தப் பரத்தையின் பிரிவைப் பற்றிப் பாடும் பாடல்கள் எத்தனே! அப்பிரிவினைச் சரி. யெனச் சாதிக்க வழிகாணும் சழக்கர்தாம் எத்தனை பேர்! என்ருலும், அச்செயல் ஓர் அநாகரிகச் செயலாகத்தானே அன்றும் கருதப்பட்டு வந்தது? பெருங்கொடை வள்ளல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/20&oldid=600870" இலிருந்து மீள்விக்கப்பட்டது