பக்கம்:பெண்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*18 பெண்

பேகன், கொண்ட கண்ணகியைவிட்டு, பரத்தையை நாடிக் கெட்ட காலத்து, அறிவறிந்த புலவர்களெல்லாம் அவன் செயலைக் கண்டித்துத் திருத்தவன்ருே முற்பட் டிருக்கின்றனர்! அதுமட்டுமன்றி, எத்தனைப் புலவர்கள் பரத்தையிற் பிரிவைப் பழித்தும் இழித்தும் பேசியிருக் கின்ருர்கள் ! எவ்வாறு அந்தப் பெருநாளிலும் பெண் இனத்தில் இப்படி ஒரு பெரும் பிரிவை உண்டாக்கினர் களோ தெரியவில்லையே! எவ்வளவு உரிமையை வாரி வழங்கிலுைம், அந்த ஆடவர் தம் காமக் களஞ்சியங் களாக ஒரு சிலரை ஒதுக்கி வைத்திருந்தார்கள் போலும்! அவருள்ளேதான் எத்தனை பிரிவு சேரிப்பரத்தையாம்காதற் கிழத்தியாம்-இன்னும் என்னென்னவோ ! இது ஒன்று மட்டும் இல்லாதிருந்தால், அந்தச் சங்க காலத்தை மகளிரின் பொற்காலம் என்றல்லவோ எழுதத் தோன்றி யிருக்கும் !

எப்படியோ பல நன்மைகளுக்கிடையில் இந்த ஒரு தீமையும் அன்றே அருமைத் தமிழ் நாட்டில் புகுந்து விட்டது. என்ருலும், அள்றைய பெண்மை நிலை உலகுக்கு எடுத்துக்காட்டாய் அமையும் உயர்ந்த நிலையிலேத்ானே அமைந்துள்ளது ? பரத்தையர் ஒழுக்கங்கூட அக்காலத் தார் சிலர் ஐயுறுவதுபோன்று-ஒரு வேளை நாடக வழக் காகத்தான் இருக்குமோ நாடக வழக்கு உலகியல் வழக்கென வழக்கை இரண்டாக்கிக் கண்ட அந்த நெறி யில், இந்தப் பரத்தையர் ஒழுக்கம் நாடக வழக்கின்பாற் பட்ட ஒன்ருகத்தான் இருந்திருக்க வேண்டும். இன்றேல், எல்லாவகையினும் ஏற்றமுற்றிருந்த தமிழகம்-அத் தமிழகத்தின் தலையாய பெண் மையறம்-இப்படி உலக வழக்கில் குறையுற்றதாக மாற முடியுமோ ? முடியாது! முடியாது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/21&oldid=600871" இலிருந்து மீள்விக்கப்பட்டது