பக்கம்:பெண்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பென்மையும் துறவும் 21

தலை தூக்கி நின்ற காலமல்லவா அது ? ஆம். அச்சமயத் துத் துறவு மனப்பான்மை மகளிரை இவ்வாறு வாட வைத்தது போலும் உலகம் நலம் பெற வேண்டுமென விழைந்த போதி நீழல் பொருந்திய புத்த தேவர் இப்படி மகளிரை வதைக்க வேண்டுமென்ரு சொன்னர் ? இல்லை. ‘ஆசை அறுமின்கள்,' என்று வலியுறுத்தி, தான் வாழப் பாடுபடும் கொடுமையைப் போக்கி, ' நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை என்ற இந்த அறநெறியல்லவா மக்கள் வாழ்வில் மலர வேண்டுமென்று அவர் பாடு பட்டார் ? ஆல்ை, அவர் பெயரைப் போற்றி அவரது மெய்ச்சமய நெறி நின்று வாழ்கின்றவர்கள் ஏன் அனைத் தையும் பொய் என்று கருதவேண்டும் ? வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, மற்றவரை வாடவைக்காது வாழும் பெருநெறியை அல்லவா அவர் வேண்டினர் ? பெண் டிரைப் பேயென வெறுக்கும் ஒரு கொள்கை பின் ஏன் அவர் பெயரால் நாட்டில் புகுந்துகொண்டது ஆகா ! இக் கொள்கைகளைப் புகுத்தியவர்கள் ஆண்கள் மட்டுமா இல்லையே. அசோகனுடைய பெண் மக்களே தமிழ் நாட்டுக்கும் ஈழ நாட்டுக்கும் சென்று புத்த சமயத்தைப் பரப்பிய செய்கை என் கண்முன் அகலாது காட்சியளிக்கின்றதே தமிழ் நாட்டில் அவர்தம் வரவின் அடிச்சுவடு அறிய முடியாது போயினும், இருபதாம் நூற்ருண்டிலும் அந்த அசோகன் பெண்கள் ஈழ நாட்டில் காணுமிடந்தோறும் கற்சிலையாய்க் காட்சி அளிக் கின்றனரே அத்தகைய பெண்களா இந்த இழிவு செய்யும் நிலையினை நாட்டில் வளர்த்தனர் ? இதோ மணி மேகலைதான் என்ன செய்கின்ருள் நரைமூதாட்டி ஒருத்தியைக் காட்டி, அவள் ஏதேதோ பேசுகின்ருளே ! என்ன ! அவளது கிழப்பருவம் அவ்வாறு அழகிழந்தால் தான் என்ன ? இளமை ததும்பிய அவள் முகம் எங்கே போவது ? பெண்டிரும் கள்ளும் ஒன்ருக இணைக்கப்படும்

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/24&oldid=600874" இலிருந்து மீள்விக்கப்பட்டது