பக்கம்:பெண்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பெண்

காலமாகிவிட்டதே இது இருமனப் பெண்டிர் நிலை எல்லாப் பெண்டிருக்கும் பொருந்திய தாகாதே அரிய நிலையில் வையம் வாழ வேண்டி அரச போகத்தைத் துறந்து, அல்லல் வாழ்வை நீக்க அரும்பாடுபட்ட அண்ணல் புத்ததேவர் இப்படிப் படைப்பின் ஒரு பாக மாக அமைந்த பெண்மை நலத்தைப் பேணவேண்டா என்று எங்குக் கூறினர் ? அவர் வாய்மொழிப்படி வையம் வாழ வழி காணுவதை விடுத்து இப்படிப் பெண் களே இழிவுபடுத்தும் இந்த நெறியை வளர்க்க யார்தான் வழி காட்டினர்களோ ! 'பெண்டிரும் உண்டியும் இன் றெனில் மக்கட்கு உண்டோ ஞாலத்து உறு பொருள்? என்று யார் வாயிலாகவோ-இல்லே - ஒரு காமக்களி ய்ாட்டத் தலைவன் வாயிலாகக் கூறி, அதை மறுக்கும் வழியிலேதான் என்னென்ன கொடுமைகள் கூறுகின் றனர் . ஏன் இச்செயல்? உரிமை வாழ்வில் ஆண்களொடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்ந்த இந்த நாட்டிலே, இப்படிப் பெண்கள் காமக்களஞ்சியங் களாகப் பழித்துரைக்கப் படுவானேன் ? பரத்தையர் குலத்தில் பிறந்த மாதவி கோவலல்ை சிறுமைப் பட்டால்தான் என்ன ? ஏன் அவள் தன் மகள் மணி மேகலையை மனே வாழ்வில் புகுத்தக் கூடாது? அம்மம்ம! அந்தத் தொல்காப்பியர் காலத்தில் தொடங்கிய அந்தப் பரத்தைமை விளையாட்டன்ருே இன்று இப்படி அழகரசி யாகிய மணிமேகலையைத் துறவு வாழ்வில் செலுத்தியது?

ஆம் அதே நிலையில் இதோ இல்வாழ்வின் ஏற்ற மெலாம் உணர்ந்த செல்வியார் எதிரே தெரிகின்றனரே ! கற்புக்கணிகலமான பொற்புடைச் செல்வியாகிய அம் மங்கை நல்லார் யார் ? ஆதிரையாரல்லரா ! எவ்வளவு தான் துறவு நெறியை மேற்கொண்ட போதிலும், மணி மேகலா தெய்வமே அமுதசுரபியைத் தேடித் தந்த போதிலும், அதில் அக்கற்புடைச் செல்வியார் ஆதிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/25&oldid=600875" இலிருந்து மீள்விக்கப்பட்டது