பக்கம்:பெண்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் துறவும் 23

யாரிட்ட சோறு அல்லவா பல்கிப் பெருகிப் பாரகமடங் கலும் பசிப்பிணி அறுவதற்கு உதவி செய்தது : மணி மேகலை போன்ற துறவு நிலையில் வாழும் பெண் வாழ்வைக் காட்டிலும் வாழ்வாங்கு வாழ்ந்து வளம் பெருக்கும் இல்லற வாழ்வு ஏற்றமுடைய தென்பதை இச்செயல் காட்ட வில்லையா ? எல்லாம் அறிந்திருந்தும் ஏனே தமிழ் நாட்டில் இப்படிப் பொன்னேயும், மண்ணையும், பெண் இணயும் ஒரு சேர வெறுக்கும் ஒரு துறவு குடியேற்றப் பட்டது! பெளத்தமும் சமணமும் உலகை வாழ்விக்க வந்த சமய நெறிகளாயினும், அவற்றைப் பின்பற்ற வந்த ஒரு சிலர் இவ்வாறய துறவு நெறிகளை யெல்லாம் புகுத்தி ஏன் இடர் விளேத்தார்களோ தெரிய வில்லையே! உண்மையில் அவர்தம் சமயத் தலைவர் காட்டிய பெரு நெறியில் வாழ்ந்திருப்பாராயின், இன்று நாட்டில் அவைகள் அருகித்தோன்றும் கிலே உண்டாகியிருக்குமா?

அதோ சீவகன் தோன்றுகின்ருனே அவன் சமண சமயத்தவனுயினும், பெண்களே எவ்வளவு சிறப்பாகப் போற்றுகின்ருன் ! தன் வாழ்வின் வைப்பாகவன் ருே தன் மனைவியரை அவன் மதிக்கின்ருன் ! அரச போகத்தைக் காட்டிலும் அழியாப் பேரின்ப வாழ்வாகவன்ருே அவன் பெண் நலம் பொற்றுகின்ருன்! ஆகா! காதல் இன்பம் அவனிடம் கனிந்து நிற்கின்றதே! அவன் கதை பாடிய அந்தத் திருத்தக்கதேவர் சமண சமயத்தவராயிருந்தும்அச் சமயத் துறவியராயிருந்தும்-எப்படிப் பெண்களைப் போற்றுகின்றனர்! அந்தச் சமண சமயத்திலேதான் இல்லற வாழ்வு வேண்டாவென்று யார் சொன்னர்கள்? இந்தத் துறவிகள் இவ்வாறு பெண் துறவு என்று ஒன்றைக் கற்பித்துக்கொண்டு, வீட்டையும் காட்டையும் விளக்க வரும் பெண் குலத்தை ஏனே பழிக்கின்ருர்கள்! அம்மம்ம! அந்த நாலடியாரில், தூய்தன்மை என்று ஒரு அதிகாரத்திக்குப் பெயரிட்டுக்கொண்டு பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/26&oldid=600876" இலிருந்து மீள்விக்கப்பட்டது