பக்கம்:பெண்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் துறவும் 27

எப்படியோ இன்றும் பற்றி எரித்துகொண்டு தானே வருகின்றது! . . . . . .

அந்தச்சமயங்களிலும் இல்வாழ்க்கையை மேற் கொள்ளும் மக்கள் இருக்கின்ருர்களே! அவர்தம் வாழ் வில் அன்பு மலர் மலர்ந்துதானே இருக்கின்றது? அவர் தம் சமயத்தலைவர்களும் எங் கு ம் பெண்மையைப் பழித்ததாகக் காணவில்லையே! புத்தர் காடு நடந்த காலத்து, தம் கண்ணனைய மனைவியின் முகத்தைக்கண்டு கண்டு கசிந்து கசிந்து உருகி நின்ற காட்சி இன்றும் நம் மனக்கண்முன் அகலாக் காட்சியாகவன்ருே விளங்கு கின்றது? அவர் தம்மனேவியைப் பேயென எண்ணிப் பிரிய வில்லையே அஞ்சி அகல வில்லையே ! அன்பு தோய்ந்த அருட் பார்வையில் அவளைக் குளிப்பாட்டி, அவளை எப் படிப் பிரிவதென்று எண்ணி ஏங்கியல்லவா பிரிகின்ருர்? அவர் வளர்த்த சமயத்தே இன்று பெண்ணை வெறுக்கும் பெரும்மாசு இடம் பெற்றுளதே! சமணத்திலும் அவ்வாறு தானே காண்கிருேம் பாவம்! இந்தத் துறவிகள்மேல் தவறில்லை. இவர்களுக்கு என்ன தெரியும் காதல் வாழ்வைப் பற்றி ? ஒன்றை வெறுப்பதன் முன் அதன் இயல்பறிந்து, நன்மை தீமைகளே நாடியுணர்ந்து, பின்பு நல்லதாயின்கொண்டு, அல்லதாயின் தள்ளி ஒதுக்கி வாழக் கற்பதுதான் அறிவுடைமை. அவ்வாறு அல்லாது குழவியிடத்தே துறவு நிலவவேண்டும் என்று பேசி, கற்கண்டின் சுவையையும் விஞ்சும் காதல் வாழ்வையும், அவ்வாழ்வின் விளக்கங்களாகிய பெண்களேயும் ஒதுக்கு வார்களாயின் அவர்கள் பால் இரக்கங் கொள்வதல்லது வேறு என்ன செய்ய வல்லோம் 1.

என்ருலும் எங்கள் நிலை சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்களின் நிலையைக் காட்டிலும் சிறிது தாழ்ந்து தானே காணப்படுகின்றது ! பெண்மையும் தாய்மையும் அன்று அறிவறிந்த புலவர்களால் போற்றப்பட்ட பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/30&oldid=600880" இலிருந்து மீள்விக்கப்பட்டது