பக்கம்:பெண்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெண்

மற்றவரையும் வாழவைத்து, மனேக்கணிகலனும் மக்களைப் பெற்று, சுற்றமும் தழுவி, உற்றவர் ஒம்பி, இறுதியில் வேட்கை நீங்கிய வழிக் கொண்ட தலைவியுடனே தனித் துச் சென்று பிற பற்றுக்கள் அற முயல்வதற்ருே வீடு பேற்றிற்கு வழியாகிய துறவற நெறியென்று கூறு கின்ருர் தொல்காப்பியர்? இதை விடுத்து, குழவி யிடத்தே, பின் கரைவரும் என்று எண்ணித் து ற வு நிலையை மேற்கொண்டு, பெண் இன்பமும் அவர் வழிப் பெறும் பயனும் இன்னவென அறியா முன்னமே அவர் களைப் பேயென்றும் பிறவென்றும் பேசிப் பழித்து வாழும் ஒரு நெறிபற்றி நிற்கின்ருர் இந்த நாலடி யார் பாடிய துறவிகளுட் சிலர். எப்படி இரண்டுக்கும் இடையில் கழிந்த காலத்தில் இந்த வேறுபாடு தமிழ் நாட்டில் புகுந்துவிட்டதோ, தெரியவில்லையே!

சீவகன் தான் சமணசமயத்தைச் சார்ந்தவனுய் இருந்தும், தொல்காப்பியர் காட்டிய அந்தத் தூய வழி யையே தன் வாழ்வினது வழியாகக் கொண்டிருக் கின்ருன். மனைவியரொடு மகிழ்ந்து, அவர் பிரிவைப் பெருந்துயராகக் கொண்டு, பிரியாது பற்றி வாழ்ந்து, நன்மக்கட்பேறுற்று, பின் காமம் சான்ற கடைக்கோட் காலை, தான் தன் மனைவியரோடு தனியிடம் சென்று துறவை மேற்கொண்டதாகத் துறவியராகிய திருத்தக்க தேவர் எவ்வாறு அழகுபட எழுதியுள்ளார். அதே சமயத்தே எப்படிப் பெண்ணேப் பேயெனக் கூறும் பெருங்கூட்டம் உருவாயிற்ருே தெரியவில்லையே! எப்படி ஆராய்ந்தாலும், இந்தப் பெளத்த சமணத் துறவியரே நாட்டில் எங்களை-எம் பெண் இனத்தை-இழிவு படுத்தப் புகுந்தனர் என்பது வெள்ளிடை மலேயென விளங்கு கின்றது. இவர்கள் அன்று முட்டிய தீ, இத்தமிழ் நாட்டை, இவர்கள் பெயரால் அல்லாவிட்டாலும், வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/29&oldid=600879" இலிருந்து மீள்விக்கப்பட்டது