பக்கம்:பெண்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் துறவும் 25

என்றும் இந்த நாக்கில் நரம்பற்ற துறவிகள் பேசுவது பேச்சா? அல்லது பேயாடலா? அந்தச் சங்க காலப் புலவர்தம் வாழ்நாளில் இவர்கள் இருந்திருப்பார் களாயின், இவர்கள் ஒன்று நாடு கடத்தப் பட்டிருப் பார்கள்; அல்லது வெஞ்சிறையில் இட்டு, வாட்டப் பட்டியிப்பார்கள். பூச்சூடலும், வேலை ஒத்த கண்ணேப் போற்றலும், முல்லையையும் பின்னடையச் செய்யும் முறுவலேப் பாடலும் எவ்வளவு சிறப்பு என அன்றைப் புலவர்கள் எண்ணி வாழ்ந்துள்ளார்கள் என்பதை அகமும் பி ற வு ம் காட்டுகின்றனவே! ஆகா! அந்த வள்ளுவர்தாம் பல்லேயும் கண்ணையும் எத்தனை கோணங் களிலிருந்து எண்ணி எண்ணிப் பார்க்கின்ருர்! அத்த கைய நல் வாழ்வு வாழ்ந்த நாவலர் பிறந்த நாட்டிலே தான் இந்தப் புல்லுருவிகளும் பிறந்துள்ளார்கள். வள்ளு வரைத் தம் சமயத்திற்கு இழுக்கும் இன்றைய பெருங் தலைவர்கள், இத்தகைய புல்லுருவிகளை அவர் த ம் சமயத்திலிருந்து ஒதுக்கவேண்டும்; அன்றேல், அவர் சமயம் என்றென்றும் மாசு படிந்தே மாழ்கவேண்டும். இவர்களைப் போற்றுபவர், ஒன்று இவர்களைப் போலக் காடு சென்று கண் மூடி வாழ்க்கை வாழ வேண்டும்; அல்லது, இவர்களால் தம் சமயத்துக்கு உண்டான மாசுகளைக் கழுவ முற்படல் வேண்டும். செய்வார்களா?

'காமம் சான்ற கடைக் கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.” என்ற தொல்காப்பியச் சூத்திரம் எவ்வளவு அழகாய் அமைந்துள்ளது! துறவறம் என்ற ஒன்றும் இல்லறத்தின் வழியே அமைவது என்பதை இஃது எடுத்துக் காட்டு கின்றது. இல்வாழ்வில் காதல் மனையாளும் காதலனும் மாறின்றி ஒருமை உணர்வின் வயப்பட்டு வாழ்ந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/28&oldid=600878" இலிருந்து மீள்விக்கப்பட்டது