பக்கம்:பெண்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெண்

சொல் செயலில் வந்து என்றுதான் பெண் சிறக்க வாழ்வாளோ! -

தமிழ் நாட்டுப் பெண்கள் வரலாற்றில் பொற்கால மெனக் குறிக்கப்படும் அந்தச் சங்க காலம், இனித் திரும்பி வாராதோ! தமிழ் நாடு மட்டுமென்ன ! அன்று நாகரிகம் பெற்ற உலக நாடுகள் அத்தனையிலும் பெண். கள் ஏற்றமுற்றுதானே இருந்தார்கள்! கிளியோபத்திரை என்ற மேலைநாட்டுப் பெருஞ்செல்வியின் பேரழகையும், பெருஞ்செல்வாக்கையும், இன்றும் எண்ணுத அறிஞர் உண்டோ ? அதே போன்று, பிற நாடுகளிலும் ஆண்க ளோடு பெண்கள் அறிவும் திறனும் ஒருங்கே அமையப் பெற்று வையக வாழ்வு தன்னில் எந்த வகையிலும் வேறு பாடு இல்லாமல்தானே வாழ்ந்தார்கள் ? அல்லாவிட்டால் அன்றைக்கே ஒரு புரட்சிப் புலவன் தோன்றி, பெண் ணடிமை தீரவேண்டும், என்று விண் முட்டப் பாடி யாவது இருக்க மாட்டான ?

அந்த நாளில் மைந்தரும் மகளிரும் கலந்து உறைந்த காதல் வாழ்வுதான் எவ்வளவு ஏற்றமுடையதாய் அமைந்தது 1 வையைப் பெரும் புனலினும், காவிரிப் பெருக்கிலும் பெண்டிர் தம் காதற் கணரொடு கலந்தாடும் காட்சியைப் பாடாத புலவரும் உண்டோ ? -

தாம்வேண்டும் காதற் கணவ ரெதிர்ப்படப் பூமேம்பா டுற்ற புனைகரும்பிற் சேம மடநடைப் பாட்டியர்த் தப்பித் தடையிறந்து தாம்வேண்டும் பட்டினம் எய்திக் கரைசேரும் ஏமுறு நாவாய் வரவெதிர் கொள்வார்போல் யாம்வேண்டும் வையைப் புனல் எதிர் கொள்கூடல்"

என்று கரும்பிள்ளைப் பூதனர் பாடும் காலத்துப் பெண் கள் எவ்வளவு பெருமிதம் உற்றிருந்திருப்பார்கள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/33&oldid=600883" இலிருந்து மீள்விக்கப்பட்டது