பக்கம்:பெண்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் துறவும் 31

கானல் வரியும் பிற பாடல்களும் அந்தப் பெண்களை எவ்வளவு ஏற்றமுறச் செய்திருதிக்கும் ஆல்ை.............

ஆல்ை, ஒரு நூற்றண்டுக்குள் ஏன் இப்படித் தமிழ் நாடு முழுவதும் ஒரு பிக்குணிக் கோலம் காட்சி அளிக் கின்றது! காமத் தேவன் வறிதே வாளியைப் பூமிமேல் எறிந்து ஏக்கமுற்று வாடும்படி, அழகிய மகளிர் கணவ ரொடு காதல் வாழ்வைத் துய்ப்பதை விடுத்து, இப்படிப் பிக்குணிக்கோலம் கொண்டு திரிகின்றனரே! அவர்தம் துறவு நெறி ஒருவகையில் போற்றப்பட வேண்டுவதா யினும், ஆராயின், அதல்ை விளையும் நன்மையினும், தீமையன்ருே அதிகமாய் இருந்திருக்கும்? அவர்கள் செல்லுமிடமெல்லாம் தம் சிந்தையைப் பறிகொடுக்கும் காளேயர் இல்லாமலா ஒழிவர்? என்னதான் பிக்குணிக் கோலம் கொண்டாலும், இயற்கை அழகையும் மறைக்க ஒண்ணுமோ! ஆம்! அவர்கள் தமக்கே உரிய கல்லழகை மறைத்து, பிக்குணிக் கோலம் கொண்டு சுற்றி வரும் அந்த நாட்களில் தமிழ்நாட்டு வரலாறு ஏன் இப்படி இருட்டறையில் கொண்டு தள்ளப்படுகின்றது ? எங்குப் பார்த்தாலும் நாட்டில் பெளத்த விகாரங்களும், அவற். றில் பணியாற்றும் பிட்சுக்களும், பிட்சுணிகளுமே நம் கண் முன் நிற்கின்றனரே அது தமிழ்நாட்டு இருட் டடைப்புக் காலம். ஆம்! அதைக் களப்பிரர் ஆண்ட கால மென்றல்லவா வரலாற்று ஆசிரியர்கள் திட்டிச் சென் றிருக்கிருர்கள். வடக்கே வேங்கடம் தொடங்கித் தெற்கே குமரி வரையில் களப்பிரர் ஆண்ட இந்த நாளில் தமிழ்நாட்டு வேந்தர்கள் வலி குன்றியிருந்தார்கள் போலும்! என்ருலும், புத்த மதம் மட்டும் தலைதுாக்கி வாழ்ந்து வந்துள்ளதே! ஏன் அத்துடன் அதோ சணமும் போட்டியிட்டு வளாகின்றதே ! புத்த சமண சமயங்கள் சங்க காலம் தொடங்கித் தமிழ்நாட்டில் பரவித் தமிழ் மொழியை வளர்த்த போதிலும், இந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/34&oldid=600884" இலிருந்து மீள்விக்கப்பட்டது