பக்கம்:பெண்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெண்

துறவு நெறியை வற்புறுத்திய காரணத்தால் அந்த நூற்ருண்டுகளில் அவை பெண்கள் உயர்வை எத் தனேயோ வகையில் தாழ்வுறச் செய்தன என்பது வெள் ளிடை மலேயாகத்தானே காண்கின்றது. இந்த நிலையில் களப்பிரர் ஆண்டு வந்த இடைக்காலத்தில் என் தமிழ் காட்டுப் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் ? அவர்தம் வாழ்வும் வளமும் எத்தகையன? இவற்றை அறிய வாய்ப் பில்லேயே! என்ன! அனைவரும் பிக்குணிகளாக மாறிவிட் டார்களா? இல்லை. அதோ! நம் கண்முன் காதல் வாழ் வில் திளைக்கும் ஒரு குடும்பம் காட்சி அளிக்கின்றதே! யார் அவர்கள்? ஆம், நமக்குத் தெரிந்தவர்களே.

ஆகா காரைக்காலன்ருே அது ? அதில் வாழ்ந்த மாதரசியார் புனிதவதியாரல்லரா அச் செல்வியார் ! இந்த இருபெருஞ் சமயத் தலைவர்களுக்கும் இடையிலே சைவமும் வாழ்ந்து வந்திருக்கின்றதே அந்தச் சைவக் குடும்பத்தின் செல்வியரல்லவா அவர் ? அவர் தம் காதல் வாழ்வு எவ்வளவு இனிய முறையில் இயங்குகின்றது. கொண்ட கணவன் கருத்துக்கு மாறுபடாத பெருநிலை யில் அவர்தம் அற வாழ்வு தொடங்குகின்றதே அவர் கற்பின் திறம் அளக்க ஒண்ணுத ஒன்றன்ருே கணவன் மொழி தவருத காரிகையராய் வாழ்ந்த அவரிடம் எவ் வளவு தெய்வத் தன்மை விளங்குகின்றது!

ஆங்கவன்றன் இல்வாழ்க்கை அருந்துணையாய் அமர்கின்ற பூங்குழலா ரவர்தாமும் பொருவிடையார் திருவடிக்கீழ் ஓங்கிய அன் புறுகாதல் ஒழிவின்றி மிகப்பெருகப் பாங்கில்வரு மனை அறத்தின் பண்புவழா மையிற்பயில்வார்'

என்று பின்னர் வந்த சேக்கிழார் அந்த அம்மையாரது திறத்தைக் கூறும்போது அவர்தம் இல்வாழ்வின் ஏற்றம் விளங்குகின்றதன்ருே ? மனையறப் பண்பு வழுவர்த பெரு நெறியன்ருே பெண்கள் வேண்டுவது ? மண்ணிற்பிறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/35&oldid=600885" இலிருந்து மீள்விக்கப்பட்டது