பக்கம்:பெண்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் துறவும் 33.

மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்த இல்வாழ் வில் வாழ்வதன்ருே ஏற்றமுடைத்து ? அவ்வாழ்வு எதிர் பாராத பெரு வகைகளால் மாறுபாடினன்ருே பிற வற்றைப் பற்றி எண்ணுவது? இதைத்தானே அம்மை யார்,

'பிறந்து மொழிபயின்று பின்னெல்லாம் காதல் சிறந்துகின் சேவடியே சேர்ந்தேன்-கிறந்திகழும் மைஞான்ற கண்டத்து வானேர் பெருமானே! எஞ்ஞான்று தீர்ப்ப திடர் ?

என்று பாடுகின்ருர்? அவர் உலகில் வாழ்ந்ததெல்லாம் கணவனுக்காகவே தம்காதல் வாழ்வுக்காகவே. அவ் வாழ்விற்குத் தடையேற்பட, அவனுக்கென நின்ற ஊனுடம்பை ஒறுத்து வேறுடம்பு பெற்ருேர் என அறி கின்ருேம். அதல்ை, அவர் கணவன் அவரை அடிமைப் படுத்தி வைத்திருந்தான் என்று சிலர் கூறுவர். அஃது எவ்வாறு பொருந்தும் ? அம்மையாரின் அருள் நெறியை அறிந்தபின் அவரைத் தெய்வமெனத் தெளிந்தன்ருே விலகிவிட்டான் கணவன்? அதற்கு முன் அவன் அம்மை யாரை அடிமைப் படுகுழியில் தள்ளினதாகக் காண வில்லையே! அம்மையார் உரிமையோடுதான் வாழ்ந்தார் ; அவன் தம்மை ஒதுக்கி மற்ருெருத்தியை மணந்த காலத் தும் அவனேச் சார்ந்து வாழ விரும்பிச் சென்ருர்; ஆல்ை, அவன் மாறுபட்ட காரணத்தால், அந்த மனிதப் பிறவியே வேண்டாமென்று வெறுத்தொதுக்கினர். மண வாழ்வு இருவர் கருத்தும் ஒருமித்து, எழுமையும் பிரிக்க வியலாத பெருவாழ்வு, என்ற தமிழர் அறநெறியை அறிந்த அம்மையார், மறுபடியும் மண்ணில் தம் அழகுருக் கொண்டு வாழ விரும்பவில்லே. ஆகவே, அந்தக் காலத்தும் தமிழ்நாட்டுப் பெண்கள் காதல் அறத்தைக் கைவிடா நெறியிலேதான் போற்றி வாழ்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/36&oldid=600886" இலிருந்து மீள்விக்கப்பட்டது