பக்கம்:பெண்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. பெண்

எனினும், ஒரு சிலருக்கே இங்கு ஐயம் எழுவதை நான் அறிகின்றேன்.

'தெய்வம் தெர்ழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யு மழை.' என்ற வள்ளுவர் கூற்றுக்கும், அதனைப் பொய்யில் புலவன் பொருளுரை என்று குறிப்பிட்ட சாத்தனர் சொல்லுக்கும் மாருக அம்மையார் கணவரை விட்டு வேறு கடவுளைத் தொழுதது தமிழ்நாட்டு மரபுக்குத் தவறுதானே என்று சிலர் இன்று பேசுவது என் காதில் விழாமல் போகவில்லை. ஆல்ை, அவர்கள் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சேக்கிழார் எங்காவது அம்மையார் தம்பொருட்டு இறைவனே வேண்டியிருப்பதாகக் காட்டியிருக்கிருரா என்பதை எண்ணவேண்டும். கணவன் வழிக் காதல் வாழ்வு வாழும் செ ல் வி யார், அக்கணவனுக்கும், அவன் வழித் தோன்றும் மக்களுக்கும், பிற சுற்றத்தாருக்கும் தீங்கு நேராதிருக்கவே இறைவனே வழிபட்டார் என்பதை அறிகின்ருேம். அவர் சுயநலம் கொண்டு கண்ட கடவுளரை வழிபட்டிருப்பாராயின், கணவன் மறுத்ததும் பேயாக வேண்டிப் புலம்ப மாட்டார். தம் கலமும் வாழ்வும் வளமும் பிறவும் ஒறுத்து ஒன்றிய தியாகவாழ்விலே வாழ்ந்த அந்தச் செம்மனச் செல்வி யார் வாழ்க்கை, அந்த இருண்ட காலத் தமிழகத்திற்கு ஓர் ஒளி விளக்காய் அமைகின்றது என்று கூறுவதைத் தவிர, என்னல் வேருென்றும் சொல்ல இயலவில்லையே! பொன்னையும் பெண்ணையும், மண்ணையும் வெறுக்கும் துறவு கிலேயை காட்டில் வளர்த்து வந்த பெளத்த சமணத் துறவியர் நாடெங்கும் நிறைந்து தத்தம் சமயத்தை ஒல்லும் வகையான் வளர்த்த அந்த நாளிலே - அரச ஆ தி க்க மும் பிற செல்வாக்குகளும் .ெ ப ற் று அவை வளர்த்த அந்தப் பெருநாளிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/37&oldid=600887" இலிருந்து மீள்விக்கப்பட்டது