பக்கம்:பெண்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் துறவும் 35

மகளிர்க்கு ஏற்ற முடையது இல்லற வாழ்வே என்றும், அவ்வாழ்வு கிட்டாதாயின் வேறு வகை யாக உலகில் வாழ்ந்து உலவுவதைக் காட்டிலும் பேயாகித் திரிந்து மாள்வதே மேல் என்று ம் தம் கொள்கையை நிலைநாட்டிய அப்பெருஞ் செல்வியாரைப் போற்ருதிருக்க வியலுமா? அவர் கணவன் மற்ருெருத் தியை மணந்து போன்று, அவரும் மற்ருேர் ஆடவனே ஏன் மணந்திருக்கலாகாது?’ என்று எண்ணத் தோன்றும் பிற நாட்டுப் பெண்களுக்கு. ஆல்ை, அந்த மாருநிலை ஒன்றுதான் தமிழ்நாட்டுப் பெண்களின் தனிப்பெரும் பண்பாயமைந்தது. அவர்தம் கற்பு நெறிதானே இன் றளவும் தமிழ் நாட்டை வாழ வைக்கிறது? எவ்வளவு தான் இந்த ஆண் சமுதாயம் கன்றி கெட்டுப் பெண் களே விலங்கினும் கீழாக கடத்திய போதிலும், கொண்ட கணவைேடு கலந்து வாழும் அந்த இன்ப வாழ்வில் அவர்கள் வாழத் தயங்க வில்லையே! இதுபற்றியன்ருே பிற்காலத்து வந்த குலசேகரர்,

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்

கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்'

என்று தமிழ் நாட்டுப் பெண்களின் பெருந்தகவைப் பேசுகின்ருர்? இதை எண்ணித்தான் போலும் இன்றைய கவிஞருங்கூட,

மங்கைய ராகப் பிறப்பதற் கேநல்ல

மாதவம் செய்திட வேண்டும் அம்மா!

என்று அழகாகப் பாட்டிசைக்கின்ருர்.

அன்று கண்ட அந்தக் கற்பு நெறி இன்றளவும் தமிழ் காட்டில் தளராது வளர்ந்து தா ேன வருகின்றது! அதோ அந்தக் காலமும் கழிந்து கொண்டே போகின் றது. இருள்-இருள்-இருளின் கோடியிலே ஒரு சுடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/38&oldid=600888" இலிருந்து மீள்விக்கப்பட்டது