பக்கம்:பெண்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையின் பெரும்புரட்சி

காஞ்சியில் பல்லவர் சிறக்க வீற்றிருந்து அரசுபுரி கின்றனர். மகேந்திரன் ஆட்சியன்ருே என் கண்முன் நிற்பது! ஆம். அந்தக் காலத்தில் பெளத்தம் அதிகமாக காட்டில் இல்லை போலும்! அதை அடுத்துத் தமிழகத்தில் வளர்ந்த அந்தச் சமணம் அதைத் தாழ்த்தியிருக்க வேண்டும். வேறு இரண்டு சமயங்கள்-சைவமும் வைண வமும்-பெயரளவிலே நாட்டில் வாழ்கின்றன? ஆகா! தமிழ் நாடு முழுவதும் அந்தச் சமணர்தம் கொள்கை எவ்வளவு ஆழப் பதிந்துள்ளது! தமிழ் நாட்டுத் தென் கோடியில் பாண்டியனும், வடகோடியில் பல்லவனும் அச்சமயத்தை எவ்வளவு பெருவிருப்போடு வளர்கின் ருர்கள்! இடைப்பட்ட நாட்டுச் சோழரும் பிறரும் இவர் களின்கீழ்ச் சிற்றரசர்களாகத்தாமே இருக்கிருர்கள்! எனவே, வேங்கடம் குமரி யிடையிலுள்ள இந்தப் பைந் தமிழ் நாட்டுப் பரப்பில் சமணம் உச்ச நிலையிலிருந்த காலம் இது என்றுதானே சொல்லத் தோன்றுகின்றது! ஆல்ை......ஆனல் என்னவா? .

3 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/40&oldid=600890" இலிருந்து மீள்விக்கப்பட்டது