பக்கம்:பெண்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பெண்

இதோ வடக்கிலும் தெற்கிலும் சமயப் புரட்சி உண்டாகின்றதே! யார் இந்தப் புரட்சியின் தொடக்க வீரர்? அதோ இரு பெண்களின் உருவங்கள்தாமே காட்சி அளிக்கின்றன! ஒருவர் மங்கலமிழந்தவர்; மற்றவர் மன்னவன் மனைவியார். ஆகா! அந்த இரண்டு பெண் களாலே தமிழ் நாட்டிலே எத்தகைய பெரும்புரட்சி உண்டாகிவிட்டது! அப்பெண்டிர் இருவர்தம் செயல் நாட்டு நிலையையே மாற்றிவிட்டதே! புத்த பிட்சுணி களும், சமணத் துறவிகளும் எங்கே? என்ன இப்படி ஒரே அடியாக மாறிவிட்டது நாடு இந்த மாற்றத்திற் குக் காரணம் என்ன? யார் மாற்றினர்? ஆகா! அவர்தம் பெயரைச் சொல்லத்தான் எனக்கென்ன பெருமிதம்! ஒருவர் வடபகுதியில் புரட்சி செய்தவர்-திலகவதியார்; மற்றவர் தென்பகுதியில் பெருமாற்றம் கண்டவர்-மங்கை பர்க்கரசியார். இந்த இரு பெ ரும் பெண்மணிகளே நாட்டில் புரட்சித்தீப் பரவிச் சமயநிலை மாறச்செய்து விட்டனர். எத்தகைய புரட்சி! அமைதிப் பணியிலே புரட்சி! கொண்ட கணவன் கருத்தழிந்த காலத்து, அவனை அருகிருந்தே மாற்றிய அறப்புரட்சி!

அந்தோ! தருமசேனர் தம் சமயம் விட்டுப் புறச் சமயம் சார்ந்ததை எண்ணி எண்ணித் தமக்கையார் திலகவதியார் திருவதிகையில் வாடுகின்றனரே! ஆண்ட வன்முன் அழுது அழுது புரட்சிக்கனலை முட்டுகின்ற னரே! எப்படியும் தம் தம்பியார் சைவமாம் சமயம் சாரும் ஊழ்தர வேண்டுமென அதிகை அண்ணலின் அடி பணிந்து பாடிப்பரவும் ஒலி நம் காதில் கேட்கின்றதே! ஆம். அதோ! அவர் அறப்புரட்சி பலன் தரத் தொடங்கி விட்டது! தருமசேனர் நாவரசராய் மாறி விட்டாரே! எத்துணை இசைப்பாடல்கள் அவர் வாயி லிருந்து வருகின்றன அந்தப் புரட்சியின் உச்ச நிலை மேலோங்கிச் சிறக்கின்றதே தூண்டிவிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/41&oldid=600891" இலிருந்து மீள்விக்கப்பட்டது