பக்கம்:பெண்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெண்

மண்ணுெடு மண்ணுக மாய்த்தது. ஆ | இந்தச் செயல் சிந்திக்கச் சிந்திக்கப் பெரிதாகித் தெரிகின்றதே!

அதோ பாண்டியநாட்டின் அரசியார் தம் கண வ ைெடு கருத்தொருமித்த காதல் வாழ்வில் திளைத்திருந்த போதிலும், கடவுள் நெறியில் தம் உரிமை உணர்வோடு தானே காட்சியளிக்கின்றனர்! நாடெல்லாம் தன் நாவின் படி நடக்க ஆணையிட்ட அந்த நெடுமாறன், தன் மனைவி யாருக்கு உரிமை வழங்கித்தானே இருக்கிருன் ! அன் றைய பெண்பாலார் இந்த அளவில் சமயவுரிமை பெற் றிருந்தார் என்ருல், பிற உரிமைகள் தாமாகவே அவரிடம் பொருந்தியிருந்தன என்று கூறுவதற்கும் ஐயமுண்டோ! அனைத்து உரிமைகளும் பெற்ற அந்த அரசியார் தம் நாட்டில் செய்த புரட்சியை நினைத்தாலும் உள்ளத்தில் உணர்வோடு கலந்த வீரவுணர்ச்சி உருப்பெற்று எழுகின்றதே ! -

அரசன் ஆணைக்கும் அஞ்சாது, தம் உரிமை வாழ் வினையும் உருக்குலைக்காது, மங்கையர்க்கரசியார் காட்டில் செய்த பெரும் புரட்சியை வியவாதார் யார் ? மன்னனும் மற்றவரும் சமணசமயத்தைச் சார்ந்து ஒழுகிய காலத்தே தாம் மட்டும் தனியாய் இருந்து, ஞானசம்பந்தரை வர வழைத்து, அஞ்சாது உண்மையைப் பல்வேறு செயல் களால் பாரறியக் காட்டி வெற்றி பெற்ற தண்டமிழ்ச் செல்வியார் அல்லரா அவர் ! அவர் கொள்கையை நாட்டில் பரப்ப அவருக்கு உரிமை இருந்தது, அரசன் தனது கொள்கையை நாட்டில் பரப்ப உரிமை பெற்றிருந் தான். ஆணையும் அவன்பால் அமைந்திருந்தது. ஆல்ை, அம்மையாரிடம் புரட்சி உள்ளமும், உணர்ச்சி வேகமுமே ஒன்றியிருந்தன, ஒடி ஆடிப் பணி செய்யக் குலச்சிறை யார் என்னும் அமைச்சர் உடனிருந்தார். காழியில் பிறந்த இளைஞராகிய சம்பந்தரை வருக'வென்று வர வேற்று, தம் உள்ளத்திடத்தால், அவருக்கு உற்ற இடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/43&oldid=600893" இலிருந்து மீள்விக்கப்பட்டது