பக்கம்:பெண்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையின் பெரும்புரட்சி 44

களே இல்லையாக்கி, தம் கொள்கையை நிலைநாட்டிய பெருமை யாரைச் சார்ந்தது? பல சோதனைகளைக் கண்ட பின் தான் கொண்ட கருத்தை மாற்றிக்கொண்டு, கொற். றவன்கின்ற சீர் நெடுமாறய்ை வாழ்ந்த காட்சி வரலாறு ஏற்றுக்கொண்ட ஒன்றுதானே !! அரசனும், அவன் வழி அந்நாட்டு மைந்தரும் மகளிரும் ஒரு சேரச் சைவமாம் சமயம் சாரச்செய்த அந்த மங்கையர்க்கரசியாரின் உளத்திட்பமும், செயலாற்றும் செப்பமும் இன்றைய தமிழ் பெண்களிடம் காணமுடியுமா ? நாடும் சுற்றமும் நாளும் துயருறுத்துமென அறிந்தும், கொண்ட கருத்தை நேரிய மு ைற யி னி ல் நிறைவேறச் செய்த அந்த அரசியார் செயலாலன்ருே இன்று நாட்டில் சைவம் வாழ் கின்றது? உண்மை யறியாது, திலகவதியாரும் மங்கை யர்க்கர்சியாரும் வளர்த்த சைவத்தை அப்பரும், சம்பந் தரும் வளர்த்தார்கள் என்று இந்தத் தமிழ் நாடு பேசிக் கொண்டு வருகிறது. ஏன் ? அந்த ஏற்றத்தை எங்கள் பெண் இன்த்துக்குக் கொடுத்தால் வரும் இழுக்குத் தான் என்னவோ !

பல்லவர் ஆட்சிக் காலத்தே எங்கள் பெண் இனம் பலவகையில் ஏற்றம் பெற்றிருந்தது என்பதை என்றும் எடுத்துக்காட்ட அழியாத கற்சிலைகள்-சிற்பங்கள்-இன் றும் பல ஊர்களில் காட்சி அளித்துக்கொண்டிருக் கின்றன. அடுப்பூதும் பெண்களாய் அமையாமல், ஆடல் அரங்குகளிலும், பாடல் அரங்குகளிலும், கலே உணர்ச்சி வளர்க்கும் காரிகைகளாய் அவர்கள் விளங்கினர்கள் என் பதைக் காண எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகின்றது உளத்துக்கு ! பல்லவர்தம் குகைக் கோயில்களிலும், காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோயிலிலும், வைகுண் டப் பெருமாள் கோயிலிலும் உள்ள சிற்பங்கள் எதை விளக்குகின்றன .? சித்தன்ன்வாசல் கோயிலில் மகேந் திர வர்மன் செதுக்கியுள்ள இரண்டு பெண் உருவங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/44&oldid=600894" இலிருந்து மீள்விக்கப்பட்டது