பக்கம்:பெண்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பெண்

பெண்கள் நாட்டியக் கலையைப் போற்றி வளர்த்த பெரு மையை விளக்கவில்லையா ? அவர்தம் சிற்பங்களிற் காணப்படும் மெய்ப்பாடுகளைக் கண்டு அப்படியே இன் னும் எத்தனையோ ஆராய்ச்சியினரும் பிறரும் மயங்கித் தம்வசம் இழந்து கிற்கின்றனரே பெண்டிர்தம் ஆடலே யும் பாடலையும் கண்டு பாமர மக்கள் மட்டுமின்றி, ஆண்டவனைப் பாடிய அப்பர் சம்பந்தர் போன்ற மெய் யுணர்வாளர்கள்கூடப் போற்றி உள்ளனரே! பெண்ணின் பெருமை எவ்வளவு சிறப்பாகத் தேவாரத்தில் பேசப் படுகின்றது என்பதை அறிந்து ஒவ்வொரு பெண்ணும் மகிழ வேண்டுமென்ருே ? ஆம் இந்தப் பல்லவர் காலப் பெண்மை நலத்தை நல்ல முறையில் ஆய்ந்து இன்று வெளிக்கொணர்ந்த பெருமையும் ஒரு பெண்ணிற்கே உண்டு. - -

கோயில்களிலே தனிப்பட்ட முறையிலே பெண்கள் இந்தப் பாடலையும் ஆடலையும் பயின்று வந்தார்கள் எனவும் அ றி கி ன் .ே ரு ம். அவர்களைப் பற்றி எல் லாம் தேவாரம் நமக்கு அறிவிக்கின்றது. பல்லவப் பெருவேந்தர் ஊர்தோறும் கலைக் கழகங்கள் பல அமைத்து, அக்கழகங்களில் பெண்களைப் பெரும் பங்கு கொள்ளச் செய்து, அவர்களே நாட்டில் கலேவல்லுன ராகச் செய்த பெருமையை எண்ணின், வியவாதிருக்க முடியுமா! ஏழிசை வல்லபியராகப் பல செல்வியர் இருந்தனர். கடவுளைப் பாடிக் கசிந்துருகும் அடியவர் களெல்லாங்கூட அவர்தம் ஆடலும் பாடலும் பற்றிப் பாடினர்கள் என்ருல், அவர்தம் கலைத்திறன என் சொல்வது!

தேனர் மொழியார் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கு

என்பதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/45&oldid=600895" இலிருந்து மீள்விக்கப்பட்டது