பக்கம்:பெண்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - பெண்

களே, அதை எண்ணும் போதுதான் நடுக்கம் உண்டா கின்றது! எனினும், அந்தக் காலத்தில் அந்த ஒரு குலக் தான் அக்கலைகளைப் போற்றிற்று என்று எழுதவில்லை. தமிழ் நாட்டுப் பெண் இனமே கலே மயமாகக் காட்சி அளித்ததைத்தான் அக்கால இலக்கியங்கள், கல்வெட்டு கள், பிற நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. தமிழ் நாட்டுப் பெண்கள் வரலாற்றில் சிறந்த காலம் சங்க காலம் என்ருல், அதற்கு அடுத்தபடியாக, ஏற்றமும் எழி லும் பெற்று, கலை மலிந்த காரிகையார் வாழ்ந்து வளம் பெற்ற காலம் பல்லவர் காலம் என்றுதான். சொல்ல வேண்டும் சமயம் வாழ்வோடு இணைய, அவற்ருெடு காதல் கலக்க, அந்த இன்ப வாழ்வில் பெண்ணினம் அக் காலத்தில் தலைதூக்கி நின்றது காண மகிழ்ச்சி உண்டா கின்றது ! -

அடுத்துத் தெரிகின்ற..அந்தக் காட்சியில் கடவுள் நெறியும் காதல் நெறியும் ஒன்ருகத்தானே பேசப்படு கின்றன ! உலக வாழ்வு நிலையற்றது என்று கூறும் அடி யவர், ஆண்டவனத் தலைவனுகவும் தம்மைத் தலைவிய ராகவும் பாவித்துப் பாடுகின்ற பல பாடல்கள் எழுங் துள்ளனவே! கடவுள் நெறி மிக உயர்ந்திருந்த அந்தக் காலத்தில் வாழ்ந்த மாணிக்க வாசகரும், துறவு வாழ் வினை மேற்கொண்ட போதிலும், கடவுள் நெறியைக் காதல் நெறியோடு ஒப்பிட்டுப் பாடுகின்ருரே அவர் தம்மை ஒரு தலைவியாக்கிக் கொண்டு, பல் தோழியரை யும் கற்பனை செய்து கொண்டு அந்தக் கற்பனை உலகில் பாடிக்கொள்ளும் களவு கற்பு ஒழுக்கங்கள் என்றென்றும் மறக்க முடியாதன அல்லவா ? அவர் தம் பாடல்கள் ஒருவாறு தமிழ்நாட்டுப் பெண்களது வாழ்வினையே எடுத் துக் காட்டுகின்றன. சைவத்தில் ஆழ்ந்த பற்றுள்ள மணிவாசகர் அக்குலப் பெண்கள் ஆண்டவனே வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/51&oldid=600901" இலிருந்து மீள்விக்கப்பட்டது