பக்கம்:பெண்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் காலப் பெண்டிர் 49

வதாக அமைத்துப்பாடும் அந்தப் பாடல்கள் எவ்வளவு இனிமை உடையனவாய்க் காண்கின்றன !

எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போம்கேள் : எங்கொங்கை கின்அன்பர் அல்லார்தோள் சேரற்க! எங்கை நினக்கல்லாது எப்பணியும் செய்யற்க ! - கங்குல் பகல்எங்கண் மற்றென்றும் காணற்க’ ன்ன்னும் அடிகள் அவர் காட்டும் பெண் குலம் எப்படிப் பட்டது என்பதை விளக்குகின்றன அல்லவா அவர்தம் திருவாசகம் முழுதும் பெண்ணினம் பேசப்படும் சிறப்பை அறியாதார் யார் ? திருவெம்பாவை, திருத் தெள்ளேணம், ஊசல், சாழல், என்னும் இவைபோன்ற எத்தனையோ பிரிவுகளில் பெண்கள் பேசப்படுகின்ருர் களே! அவர் தம் பாடல்களெல்லாம் ஆண்டவனப் பற்றிய பாடல்களாய் அமையினும், அவற்றிலிருந்து அக்காலப் பெண்கள் வாழ்வினையும் ஒருவாறு அறுதியிட் முடிகின்றதே! அதுமட்டுமின்றித் தமிழ் நாட்டு விழாக் களையும் வேடிக்கைகளையும் ஆடவரினும் பெண்டிரே ஆர்வங்கொண்டு பேணி வளர்த்தவர் என்பது நன்கு புலப்படவில்லையா ? அப்பெண்கள் கடுங் குளிரில் காலைப் பொழுதில் பொய்கையில் நீராடிப் போற்றிப் பாடும் பாடல்கள் நெஞ்சை உருக்குவனவா யல்லவா இருக்கின்றன !

மொய்யார் தடம்பொய்கைப் புக்கு முகேரென்னக் - கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங் காண். என்று தாம் வாழும் வகையினைப் பாடுவதிலே இந்தப் பெண்களுக்கு எவ்வளவு பேரின்பம் உண்டாகிறது, ! ஆம்! தமிழ் நாட்டு அழியாத விளையாடல்களேயும் வேடிக் கைகளையும் அன்றும் இன்றும் போற்றி வளர்ப்பவர் தமிழ் நாட்டுப் பெண் இனத்தவரேயாவர். அவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/52&oldid=600902" இலிருந்து மீள்விக்கப்பட்டது