பக்கம்:பெண்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பென்

அவ்வளவு கண்ணுங்கருத்துமாக வளர்த்துங்கூட, இதோ காணும் திருவெம்பாவைத் திருவிழா ஏட்டளவில் அன்ருே இன்று தமிழ் நாட்டில் நின்றுவிட்டது!

மணமாகாத தமிழ் நாட்டு இளம் பெண்கள் மார் கழித் திங்கள் விடியற்காலையில் எழுந்து ஊர் தோறும் அனைவரும் ஒருங்கு கூடி, அருகில் உள்ள அருவிக்கோ குளத்துக்கோ சென்று, குடைந்து நீராடித் தம் வழி படுகடவுளே வணங்கி, தம் வாழ்வு நலம் பெறத் தக்க வழியில் நல்ல கணவனே த் தந்தருளுமாறு இறைவனே வேண்டிக் கொள்ளும் அந்த மார்கழி. நோன்பு இப்போது எங்கே உள்ளது ? அந்த மார்கழிக்கு முன் திங்களின் கார்த்திகை விளக்கீடு, 'தளந்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு என்று ஞானசம்பந்தரால் கண்டு போற்றப் பட்ட அந்தக்காட்சி, இன்று எங்கு உள்ளது? நம் நாட்டுப் பெண்கள் கொண்டாடிய நலமார் விழாக்கள் பல வீழ்ந்து விட்டனவே! எனினும், அவற்றுள் ஒரு சில, நம் அண்டை. நாடாய் இன்று ஆக்கப்பட்டிருப்பினும், அன்று நம் அருந்தமிழ் நாடாகவே இருந்த மலையாள நாட்டிலே இன்றும் வாழ்வது கண்டு நாம் ஆறுதல் பெற வேண்டிய வர்களா யிருக்கிருேம்.

மறைந்தன போக, வாழ்கின்ற இரண்டொரு விழாக் களும் இன்றளவும் பெண்களாலேயே வாழ்கின்றன என்பதை மறுப்பார் யார்? திருவெம்பாவையும், அம். மானேயும், பொற்சுண்ணம் இடித்தலும், தெள்ளேணம் கொட்டலும், சாழலும், தோணுக்கமும், ஊசலும், இவை போன்ற பிறவும் அந்தக் காலத்தில் வாழ்ந்த தமிழ் நாட்டு பெண்களது உணர்வு கலந்த உள்ள நெகிழ்ச்சியை எடுத்துக் காட்டுகின்றன அல்லவா ? ஆண்குலத்தவ ராகிய மணிவாசகர் தம்மைப் பெண்ணுகக்கண்டு அன்றைய பெண்களின் நிலைகளையெல்லாம் கண்டு கண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/53&oldid=600903" இலிருந்து மீள்விக்கப்பட்டது