பக்கம்:பெண்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் காட்டும் காரிகைமார்

சங்க காலம் தொடங்கி இதுவரையிற் பலப்பல காட்சிகள் தோன்றி மறைந்துவிட்டன. அவற்றுளெல் லாம், இரண்டொன்றைத் தவிர, பெண்மை சிறப்பாகத் தானே காட்சியளிக்கிறது ? வாழ்வே ஒரு கலையென்று வாழ்ந்த அந்த முதற்காலம் தொடங்கி, வாழ்வும் பிறவும் மாயை என்று பேசும் இடைக்காலத்தும் பிற்காலத்தும் பெண்கள் நிலை பேசப்பட்டுத்தான் வருகின்றது. அவர் தம் வாழ்வு நாட்டு மக்களது வளம் ஒம்பும் வாழ்வாகத் தானே உள்ளது ? எங்கோ இரண்டொரு காட்சிகள்யாரோ இரண்டொருவர் பாட்டு-பெண்களேத் துச்சமாக எண்ணச் செய்தாலும், திரண்ட தமிழ்ச் சமுதாயம், பெண்களேத் தெய்வமாகப் பேசுகின்ற காட்சிகள் ஒன்றன் பின் ஒன்ருகத் தோன்றிக் கொண்டுதாமே இருக்கின்றன ? இதோ தெரிகின்ற காட்சிகள், சங்க காலத்துக்குப் பின்னும் இன்று வரையினும் இடைப்பட்ட நாட்களில், சங்க காலத்தை ஒட்டிய வகையில் பெண் களுக்கு ஏற்றமளித்த ஒரு காலத்தைத்தானே படம் பிடித்துக் காட்டுகின்றன ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/58&oldid=600908" இலிருந்து மீள்விக்கப்பட்டது