பக்கம்:பெண்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெண்

கடவுள் நெறியைக் கைப்பற்றி வாழ்ந்த அடிய வரைப் பாட வந்த சேக்கிழார், அந்தப் பெரிய புராணத் திலேதான் பெண்மைக்கு எவ்வளவு ஏற்றம் தந்திருக் கிருர் முன்னே ஒரு காட்சியில் கண்ட திலகவதியாரும், மங்கையர்க்கரசியாரும், காரைக்காலம்மையாரும் மட்டு மன்றி, வேறு எத்தனைக் காரிகைமார் மூலம் பெண்மையின் ஏற்றம் எடுத்துக் காட்டப்படுகிறது திருநீலகண்டர் தம் வாழ்க்கைத் துணைவியார், இளையான்குடி மாறனர் தம் மனைவியார், கலிக்காமரின் காதல் துணைவியார் ஆகிய இவர் போன்ற எத்தனையோ பெண்மணிகள் மூலம், அவர் காலத்தும் நிகழ்ச்சி நடந்த காலத்தும் வாழ்ந்த தமிழ் நாட்டுப் பெண்மை நலத்தைப் பெரிதும் சேக்கிழார் விளக்கிக் காட்டுகின்ரு ரல்லரோ !

காவியப் புலவர் கற்பனையில் நாட்டுக்கு நஞ்செனத் தோன்றிய பரத்தை வாழ்வினத்தான் எவ்வளவு திண்மையாகக் கண்டிக்கிருர் சேக்கிழார் ! பரத்தையை நண்ணிய காரணத்தாலன்ருே திருநீலகண்டர்தம் வாழ் வரசியர், எம்மைத் தீண்டுவிராயின் திருநீலகண்டம் ' என்றனர் ? அவர் திருநீலகண்டமென்றிட்ட ஆணையே யன்ருே அந்த நாயனருக்குப் பெயராய் அமைந்தது ! அவருக்கு அவர் பெற்ருேர் இட்ட பெயர் எங்கே ? யார் அறிவார் அதை தமிழ் நாட்டுப் பெண் உலகுக்கே ஒரு பெருமை தேடித் தந்த பெயர் அல்லவா அவர் பின்னே பெற்றது ? முன் பெற்ற பிள்ளைமைப் பெயர், பிறர் என்றும் மறக்கக் கூடிய வகையில், அவர் பரத்தைமை ஒழுக்கத்தைப் பாரறியக் காட்டி. திருநீலகண்டமே ஆணயென் ருேதி, அந்த ஆணை வழி வழுவாது வாழ்ந்து, தம் கணவருைக்கு அப் பெயரை நிலை நிறுத்திய மாதரசி யாரின் வழி வந்தவர்கள்தாமே இந்நாட்டுப் பெண்மணி கள்? அந்த அம்மையர்தம் அருளறத்தின் வழித் தத்தம் கணவரைப் பெண்டிர் திருத்த முற்பட்டிருப்பாராயின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/59&oldid=600909" இலிருந்து மீள்விக்கப்பட்டது