பக்கம்:பெண்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் காட்டும் காரிகைமார் 57

இந்த காட்டில் அப்பரத்தையரைப் பற்றிப் பேச எந்தப் புலவனுவது எண்ணி யிருப்பான? அவர் வழி எம்மை’ என்றதல்ை மற்றை மாதரார் தம்மை மனத்தினும் தீண்டா நெறியில் ஆடவர் வாழ வழி வகுத்த அப் பெண்மை வாழ்க என்று கூத்தாடத் தோன்றுகிறதே ! பெரிய புராணத்தே கடவுள் நெறிக்குப் பெண்கள் அப்பாற்பட்டவர் அல்லர் என்பதை எடுத்துக் காட்டும் நெறியன்ருே எண்ணற்பாலது தெய்வ நெறிக்குப் பெண்கள் ஒரு முட்டுக்கட்டை என்று யாரோ பொய் வேதாந்தம் பேசும் பேச்சுகளை யெல்லாம் பொய்யென்று காட்டும் வகையில் எத்தனை இல்லறத்தாரை இறையுல குக்கு அனுப்பியிருக்கிருர் சேக்கிழார்! மனைவி மக்க ளோடு மட்டற்ற இன்ப வாழ்வில் வாழ்ந்த நாயன்மார் எத்துணை பேர் இறையொடு ஒன்றி வாழும் இறவாப் பேறு பெற்றனர்! எனவே, பெண்மை வீரத்துக்கும், வாழ்வுக்கும், மறுமையின் வீட்டு நெறிக்கும் வழிகாட்டி யாய் அமைவதைக் காட்டும் இப் பெரியபுராணம் தமிழ் நாட்டுப் பெண்களின் பெருமையை விளக்கும் பெரு நூல் என்பது நன்கு அறிய முடிகின்றதன்ருே ?

அதோ பல காட்சிகள் ஒன்றன் பின் ஒன்ருக விரைந்து வருகின்றன. ஆம். அவை எல்லாம் கம்பர் காட்டும் காட்சிகளாகவன்ருே தொடர்ந்து வருகின்றன இராமாயணம் வடநாட்டில் நிகழ்ந்த கதையாயினும், அதைத் தமிழ் நாட்டுக் கண்களுக்குக் காட்டும் கம்பர் எவ்வளவு அழகாகச் சித்திரிக்கின்ருர்! இராமாயணமே பெண்களின் ஏற்றம் பாடும் நூல் என் ருல்தான் என் மனம் அமைதி பெறும் என எண்ணு கிறேன். நான் மட்டுமா எண்ணுகிறேன்? சிறையிருந்த செல்வியின் ஏ ற் ற ம் சொல்லுகிறது இராமாயணம்' என்று பlவசனபூஷணமுடையாரும் செப்புகின்றனரே! கதைகளுக்குப் பெண்களே காரணமாகின்ருர்கள். அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/60&oldid=600910" இலிருந்து மீள்விக்கப்பட்டது