பக்கம்:பெண்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெண்

பெண்களைச் சித்திரிக்கும்போது கம்பர் எவ்வளவு பெருந்தன்மையாக எத்தகைய முறையில் ஏற்றம் கொடுத்து எழுதுகிருர்! தமிழ் நாட்டுக் கற்பின் முறைக் கேற்ப ஆடவரையும் பெண்டிரையும் கம்பர் சித்திரத்துக் காட்டும் காட்சி மறக்க இயல்வதோ! வால்மீகியாரையும் கம்பரையும் ஒப்பு நோக்கிப் படித்தவர்கள், பெண்மை யின் பெருமையைப் பேசுவதில் வால்மீகியாரினும் கம்பரைத்தானே மேலாகப் பேசுகிருர்கள்? ஆகா! அந்தக் கற்புச் செல்வியைத்தான் அவர் எ ப்ப டி ச் சித்திரித்துக் காட்டுகிருர்! ஒரு கையால் தலையையும் ஒரு கையால் இடுப்பையும் இராவண்ன். தாங்க, வான் வழிச்சென்ற வால்மீகியாரின் சீதைக்கும், கற்புடைப் பெண்டிரைத் திண்டினும் தீச்சுடும் என்று அஞ்சி மண்ணுெடும் கொண்டுபோகப்பெற்ற அந்தக் கம்பரின் சீதைக்கும் வேறுபாடு எத்தனை பெரிது! பிற நாட்டுக் கதா பாத்திரங்களே நம் நாட்டு முறைக்கும் வாழ்வுக்கும் ஏற்ற வகையில் போற்றி அமைக்கும் அக்கம்பர் கருத் தின் உயர்வே உயர்வு! எங்கள் பெண் இனத்தை இடையே எத்தனையோ பேர் பழித்தாலும், கம்பர் அந்தக் கரும் புள்ளிகளேயெல்லாம் துடைத்துவிட்டனரே! பெண்மை கற்பிள் திருவுரு எனக் காட்டும் அவர் பாடல் களை எண்ண எண்ண இதயம் இன்ப் வெள்ளத்திலர்ழ் கிறதே! பெண் உருவாய சீதையை அவர் வாயால் பெண் என்று கூறவில்லையே! 'கற்பினுக் கணி' என்றும், 'இற்பிறப்பு என்றும், இரும்பொறை என்றும், கற்ப்ெ னும் பெயரது என்றும், தவம் செய்த தவமாம் தையல்' என்றும் அவர் அனுமன் வாக்கில் வைத்துச் சீதையைப் போற்றும் நெறி தமிழ் நாட்டுப் பெண்மை நெறியைப் பாராட்டுவது அன்ருே?

இந்தக் கற்பு நெறியை மக்களுக்கு மட்டுமன்றி, விலங்கிடத்தும் வைத்துப் போற்றும் நிலையை யாரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/61&oldid=600911" இலிருந்து மீள்விக்கப்பட்டது