பக்கம்:பெண்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் காட்டும் காரிகைமார் 59.

மறக்க முடியும் வாலி இறந்ததும் வனப் பிழந்து கைம்மைக் கோலம் கொண் டு வாடும் தாரையின் தோற்றத்தில் எப்படித் தமிழ் நாட்டு விலங்குகளும் கற்பு நெறி கடவா வாழ்க்கையில் வாழ்கின்றன என்பதை அவர் விளக்குகின்ருரே!

"மங்கல அணியை நீக்கி, மணியணி துறந்து, வாசக்

கொங்கலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம்

கொட்டாப் பொங்குவெம் முலைகள் பூகக் கழுதொடு மறையப்

- போர்த்த கங்கை'

என்று தாரையை அவர் கருத்தால் கண்டு எழுதும் போது எவ்வளவு உணர்ச்சி உண்டாகின்றது. தாரை அவ்வாறு இருந்தது உண்டோ இல்லையோ, கம்பர் அன்றைய-ஏன்-என்றைக்கும் வாழுந் தமிழ் நாட்டுப் .ெ ப ண் க ள து பெருங்கற்புநிலைய்ை-கணவனே இழந் தோர்க்குக் காட்டுவது இல் என எண்ணும் பெரு கிலையை-நன்கு விளக்கிக் காட்டினர். அது போதாதா தமிழ் மகளிர் உள்ளத்தை உலகு அறிந்து கொள்ள?

பெண்மை தியாகத்தின் சின்னம், என்பதும் கம்பர் காட்டும் மற்ருெரு காட்சியால் விளங்குகிறதே! அதோ கைகேயியின் குரல் கேட்கின்றது. அறியா உலகம் அவளே இகழ்ந்து பேசுகின்றது. அ ப் ப டி ப் பேசச் செய்தார் கம்பர், தம் வாக்கிலும் பரதன் வாக்கிலும் அவளே வைத்து. ஆல்ை, அவர் அவளது தியாகச் சிங் தையை அறிவார். அறியாவிட்டால், அவள் சிந்தை திரிந்தமைக்குத் தேவர்கள் தவந்தான் காரணம் என்று சொல்வாரா? கைகேயியை உண்மையில் உணரா மக்கள் பலவகையில் அவளைப் பழித்துரைக்க அஞ்சுவதில்லை. ஆல்ை, ஆய்ந்து. பார்ப்பின், அதோ தெரியும் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/62&oldid=600912" இலிருந்து மீள்விக்கப்பட்டது