பக்கம்:பெண்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் காட்டும் காரிகைமார் 63

உண்மைதானே? இவரது கடவுள் அன்பும் பிறவும் இவர் தம் காப்புச் செய்யுட்களினலேயே விளங்குகின்றனவே!

ஆம்! ஏன் இவர் பெண்களேயே பழிக்கின் ருர் ? "தையல் சொற் கேளேல், என்று இவர் சொன்னதாக வன்ருே இருக்கிறது ? ஏன் இப்படி ஒரு நங்கையாரே தன் இனத்தை நலிவுபடுத்த வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லையே! மெல்லிநல்லாள் தோள் சேர்' என்று மங்கையரோடு கலந்து வாழும் காதல் வாழ்வை வற்புறுத்திய இவர், அந்த வாழ்வில் கருத்தொருமித்த செயல் இன்றியமையாதது என்பதை எண்ண மறுத்த தேனே! தையலர் சொல்லே ஆடவரும், ஆடவர் சொல்லத் தையலரும் கேட்டுக் கருத்தைப் பரிமாறிக் கொண்டு, தமக்கும் தம் வாழ்வுக்கும் உலகுக்கும் பயன் படும் வகையில் ஒல்லும் வகையாற் பாடுபடுவதுதானே இல்லறம்? இல்லற மல்லது நல்லற மன்று, என்று கூறிய இந்த ஒளவையாரே, தையல் சொல் கேளேல், என்று கூறுவானேன்? இஃது அறியக் கூடாத ஓர் உண்மைதான். என்ருலும், இவர் அதில் தவறினர் என்றுதான் சொல்ல வேண்டும் கணவனுக் கியையாத மகள்வியையும், கற் புடையாருக்கு ஒவ்வாத கணவனையும் இவர் கண்ட தாகக் கதைகளும், இவர் பாடிய பாடல்களும் உள்ளன. என்ருலும், அவற்றுள் ஒவ்வொன்றிலும் தனித்தனி ஆணையும் பெண்ணையும் பற்றி உயர்த்தியும் பழிந்துக் தான்ே கூறுகின்ருர் ?

இருந்து முகம்திருத்தி ஈரொடுபேன் வாங்கி விருந்துவந்த தென்று விளம்ப-வருந்திமிக ஆடினுள் பாடினள் ஆடிப் பழமுறத்தால் சாடினுள் ஓடோடத் தான்."

என்ற பாடலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/66&oldid=600916" இலிருந்து மீள்விக்கப்பட்டது