பக்கம்:பெண்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெண்

அற்றதலை போக அருததலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனே-வற்றும் மரமனையா னுக்கிந்த மானை வகுத்த பிரமனையான் காணப் பெறின் ?

என்ற பாடலும் சாதாரண வழக்கிலே ஒளவையார் பாட் டாகக் கூறப்படுவன தாமே? இவற்றுள் பின்னதில் ஆடவன் கொடுமையை விளக்கும் அந்த வேகம், முன்ன தில் பெண்ணின் கொடுமையில் இல்லையே இருப்பின் என் ? இந்த முறை அன்றும் இன்றும் வாழ்வில் காணும் நிகழ்ச்சிதான். இதற்காகத் தையல் சொற் கேளேல், என்றல் எவ்வாறு பொருந்தும்? பொருந்தாக் குடும்பங் களின் அடிப்படைச் செயல்கள் இருவரிடத்தும் உள்ளன என்று இவரே சொல்லியிருக்கிருரே! பின்பு ஏன் இவ் வாறு பேசுகிருர் ? இதுவும் புரியாத ஒரு புதிர்தான்.

'மைவிழியார் மனையகல், என்றும், மைவிழியார் தம் மனையகன் ருெழுகு, என்றும் இவர் கூறுவதில் கருத்து உண்டு என்று கற்ருேர் கூறுகின்றனர். எந்தப் பரத்தைமைச் செயல் கண்டு திருநீலகண்டத்தை ஆணை யிட ஒரு பெண் அமைந்தாளோ, அந்தப் பரத்தைமை யைக் கண்டுதான் ஒளவையார் இவ்வாறு கூறினர் போலும்! இந்த ஒளவையாரின் நீதியினைப் போன்றே 'நறுந்தொகை' என்னும் நீதி நூல் ஆக்கிய அதிவீரராம பாண்டியரும் இந்தப் பரத்தையரையும், குலத்தவரை யும் என்ன வேடிக்கையாகப் பிரிக்கின்ருர் ஒரு வேளை இந்தப் பரத்தையர் குலம் பொருள் பெருக்கும் ஒரு குல மாக, மேனி மினுக்கி, உள்ளத்தைக் கண்டவர் பின் ஒட விட்டு, உடலை விற்று வாழ்ந்ததோ என்பதுதானே அவர் கூற்று விளங்குவது? குலமகள் கணவனோடு ஒழுகி. இல்லறத்தில் வாழ, விலைமகளுக்கு மேனி மினுக்குதலே ஓர் அழகு என்றே கூறிவிட்டாரே ஆம் பெண் இனத்தில் ஒருத்தி விலை மகள் என்றே பேசம்படுகிருளே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/67&oldid=600917" இலிருந்து மீள்விக்கப்பட்டது